மார்கழி உதயம் கோலப்போட்டிகள்

0

உதயம்.இன் வழங்கும் “மார்கழி உதயம் கோலப்போட்டிகள்”உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரியக் கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

கோலங்களைஅனுப்ப வேண்டிய முறை:

முதலில் நீங்கள் தரையில் கோலத்தை வரைந்து விட்டு அதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு கோலத்திற்கு குறைந்தது மூன்று படங்கள் அனுப்ப வேண்டும். கோலத்தின் மேற்பக்கத்தில் இருந்து ஒரு படம் இதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மற்ற படங்கள் வேறு திசைகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.

படங்களை contest@udhayam.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு “மார்கழி உதயம் கோலப்போட்டிகள்” என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

படங்களுடன் கோலம் வரைந்தவர் பெயர், முகவரி, தொலைபேசி எண் இவற்றை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)

அரிதாக கிடைக்கும் கோலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தக் கோலம் போடுவதற்கான ஏதாவது விஷேச காரணங்கள் இருந்து அந்த விளக்கத்தை அனுப்பி வைத்திருந்தால் அதற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கோலங்கள் (சுழி, பூ, ரங்கோலி), கலர் பொடி, பூக்கள் போன்று அலங்காரம் செய்தும் அனுப்பலாம்.

கோலங்களை மின் அஞ்சலில் அனுப்பாமல் தபாலில் அனுப்ப விரும்பினால் தயவு செய்து http://udhayam.in/contact இணையத்தில் தொடர்பு கொண்டால் அஞ்சல் முகவரி தரப்படும், அதில் தரப்படும் முகவரிக்கு உங்களது படங்களை அனுப்பி வைக்கலாம்.


விதிமுறைகள்:

யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். ஆனால் போட்டியில் பங்கு பெற்ற கோலங்களை udhayam.in இணையதளத்தில் அவரவர் பெயரியேலே வெளியிட இருப்பதால் நீங்கள் முதலில் udhayam.in தளத்தில் கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே வரைந்த அல்லது படம் எடுத்து வைத்திருக்கும் கோலங்கள் ஏற்கப்படமாட்டாது. இப்போட்டிக்கு என புதிதாக வரைந்த கோலங்களை மட்டும் படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

கையால் வரைந்த கோலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மற்றவர்களுக்காகவும் நீங்கள் படங்களை எடுத்து அனுப்பலாம். ஆனால் வரைந்தவர் பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
ஒருவரே எத்தனை கோலங்களையும் அனுப்பலாம்.

போட்டிக்கு அனுப்பப்பட்ட கோலங்களை பரிசு அறிவிக்கும் முன் வேறு எங்கும் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளிப்படுத்தினால் அக்கோலம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

படங்களின் குறைந்த பட்ச அளவு 640×480 இருக்க வேண்டும். அதிக பட்ச அளவு எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
மொபைலில் எடுத்த படங்களையும் அனுப்பலாம்.
பரிசிற்கான கோலங்களை தெரிவு செய்யும் நடுவரின் முடிவே இறுதியானது.

பரிசுகள்:

சிறந்த கோலத்திற்கு முதற்பரிசாக இந்திய ரூபாய் 2000 மதிப்பிலான தமிழ் நூல்களும்,

இரண்டாம் பரிசிற்கு ரூபாய் 1000 மதிப்பிலான தமிழ் நூல்களும்,

ஆறுதல் பரிசாக நான்கு பேருக்கு தலா ரூபாய் 250 மதிப்பிலான தமிழ் நூல்களும் வழங்கப்படும்.

பரிசு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:

கோலங்களை இப்போதே அனுப்பி வைக்க ஆரம்பிக்கலாம்.
கோலங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : ஜனவரி 10, 2012.

போட்டி முடிவுகளும் பரிசுகளும் ஜனவரி மாதம் 14ம் தேதி வாக்கில் http://udhayam.in  இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

மார்கழி கோலப்போட்டியை முன்னின்று நடத்துவோர் உதயம்.இன் Traditional Arts gallery (udhayam.in) இணையதளம், உதயத்துடன் இணைந்து வழங்குவோர் தமிழ் நண்பர்கள்  (tamilnanbargal.com)  இணைய தளம்.

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.