முப்பொழுதும் உன் கற்பனைகள் இசைவெளியீடு – திரைச்செய்திகள்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா, கே. வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை ஆர். எஸ். இன்ஃபோடெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள்.
அதர்வா, அமலா பால் நடிப்பில், ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் எல்ரெட் குமார் எழுதி இயக்குகிறார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியுள்ளார். சமீபத்தில் ‘ஒரு முறை’ எனத் துவங்கும் பாடல் சென்னையில் வெளியிடப்பட்டு, அனைத்து வானொலி பண்பலைகளிலும், இணையதளங்களிலும் முதன்மை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அதன் ரீமிக்ஸ் வகை சமீபத்தில் படக்குழுவினர் அமெரிக்கா சென்ற போது லாஸ்வேகாஸ் நகரில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இசைவெளியீடு 18 டிசம்பர் 2011 (ஞாயிறு) காலை 08:30 மணி அளவில் சத்யம் திரை அரங்கில் நடைபெறவுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட கே.வி. ஆனந்த் பெற்றுக்கொள்வார். பாடல்கள், டிரைலர்கள் திரையிடுவதைத் தொடர்ந்து இரண்டு பாடல்களை ஜி. வி. பிரகாஷ் முன்னணிப் பாடகர்களுடன் இணைந்து நேரடியாக இசை விருந்து அளிக்கவுள்ளார்.
ஒளிப்பதிவு : சக்தி நடனம் : பிருந்தா எடிட்டிங் : ஆண்டனி ரூபன்
கதை : கிரண் சண்டைப்பயிற்சி : ராஜசேகர் மக்கள் தொடர்பு : நிகில்
தயாரிப்பு மேற்பார்வை : ஏ. வெங்கடேசன் இணைத் தயாரிப்பு : ஜி. ஜேம்ஸ்
தயாரிப்பு : ஜெயராமன் - எல்ரெட் குமார் திரைக்கதை, வசனம், இயக்கம் : எல்ரெட் குமார்.
படத்திற்கு நன்றி