வீடென்பது
சாந்தி மாரியப்பன்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.
கவிதையைப் படித்த தருணத்தில், என்றோ வாழ்ந்த எங்கள் கிராமத்து வீடும், மழைக்காலத்தில், கூரையில் இருந்து சொட்டிய மழை நீரும் மனதில் ஒரு நொடி வந்து சென்றது.. வாழ்த்துக்கள் !
அன்னியோன்யமாக இருந்த வீடு
அடுத்த தலைமுறையில்
அன்னியப்பட்டு நிற்பதை
அழகாய்ச் சொன்ன
சகலகலா சாந்திமாரியப்பனுக்கு
வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
@ இளங்கோவன்,
@செண்பகப் பாண்டியன்,..
கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி.
பாராட்டிய என்னைப்
பாண்டியனாய் முடிசூட்டியமைக்கு
நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
அழகான வார்த்தைகளின் ,வர்ணஜாலம் , ஆண்டவன் ,அற்புத,ஓவியம் ,இயற்கயின் , வார்த்தையில் ,படம்பிடித்த அழகு , அழகை வரவேற்பவன் என்பதால் சும்மா சொல்ல கூடாது , உங்கள் ,கவிதையும்,அழகுதான் ,, *****தேவா****
@செண்பக ஜெகதீசன்

@ தேவா,
தொடர்ந்து அளித்து வரும் உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே…. ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பில்….
ஓளிந்து நிற்கும் ஞாபகங்கள் …வாழ்த்துக்கள்…