நீரின்றி அமையாது உலகு …

புமா
 

முல்லைப் பெரியாறு …
எங்கள் நிலத்திற்கான
நீராதாரம் மட்டுமல்ல
உழைக்கும் தமிழனின்
வாழ்வாதாரம்

இடிந்துவிடுமென நீங்கள்
பரப்பும் வதந்தி
இடிக்கிறது
இந்தியாவின் இறையாண்மையை.

உங்கள்நீர்
உங்களுக்கு உணவாவதை
நீங்கள் உணரவில்லை
அதனால்
உணர்த்தப்படுகிறீர்கள்.

கெஞ்சிப்பெற நாங்கள்
கேட்கவில்லை யாசகம்
உரிமையைச் சொல்கிறது
ஒப்பந்த சாசனம்.

முல்லைப் பெரியாரை
தடுக்க முடியாது
தமிழினத்தை எவராலும்
ஒடுக்க முடியாது!!

 
படத்திற்கு நன்றி : http://www.naturemagics.com/kerala-articles/mullaperiyar-dam.shtm

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க