சென்னையில் திருவையாறு – செய்திகள்

0

கர்நாடக சங்கீத கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷன்” பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் பெரியவர் சிறியவர் என்ற வயது பேதமின்றி, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண் பெண் பேதமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ பாடி திருவையாற்று ஆராதனை விழாவை நம் கண்முன்னே சென்னை காமராஜர் அரங்கில் கொண்டுவர உள்ளார்கள். 2011, டிசம்பர் 18 முதல் 25 வரை நடை பெற உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்த இசை விழாவின் துவக்க நாளான டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சேஷம் பட்டி சிவலிங்கம் அவர்களின் நாதஸ்வரத்துடன் ஆரம்பமாகும் அதைத் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு “பத்மபூஷன்” பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ முந்நூறு கலைஞர்கள் இசைத்தும் பாடியும் வழிபடுகின்றனர். அனைவரும் வருகை தந்து இறைவனை இசையால் வழிபட, இந்நிகழ்வின் துவக்க விழாவிற்கு மட்டும் அனுமதி இலவசம். துவக்க விழா நிகழ்விற்கு ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ பாடத்தெரிந்தவர்களையும் இசைக்கத் தெரிந்தவர்களையும் வரவேற்கின்றோம். அதேபோல் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ தங்கள் காது குளிர கேட்க வேண்டுவோரையும் வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம்.

எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த இசைவிழாவில் டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு சேஷம் பட்டி சிவலிங்கம் அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் துவங்கி மாலை 4.00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு துவக்க விழாவும் இரவு 7.30 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டுடன் முதல் நாள் மூன்று நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து வரும் மற்ற 7 நாட்களில் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் காலை 7.00 மணிக்கு துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது.

 

 

நாள் / கிழமைகள்

நிகழ்ச்சிகள்

டிசம்பர்18 (2011)ஞாயிற்றுக்கிழமை

 

 

 

பிற்பகல் 2.45 மணிக்கு

நாதஸ்வரம்சேஷம்பட்டி சிவலிங்கம்

 

மாலை  4.15  மணிக்கு

பஞ்சரத்ன கீர்த்தனைகள்P.S. நாராயணசாமி  & இசைக்குழுவினர்

 

இரவு    7.30 மணிக்கு

வாய்ப்பாட்டுநித்யஸ்ரீ மகாதேவன்

 

டிசம்பர் 19 (2011) திங்கட்கிழமை

 

 

காலை  7.00 மணிக்கு

இசைச் சொற்பொழிவுசிந்தூஜா

 

காலை  9.00 மணிக்கு

செமி கிளாசிக்கல் இசை”அபஸ்வரம்” ராம்ஜி

 

காலை  10.30 மணிக்கு

பரதநாட்டியம்விபஞ்சீ

 

மதியம்  1.00 மணிக்கு

வாய்ப்பாட்டுசைந்தவி & வினயா

 

பிற்பகல் 2.45 மணிக்கு

வாய்ப்பாட்டு ஹரிச்சரண்

 

மாலை  4.45 மணிக்கு

பரதநாட்டியம் ஷோபனா

 

இரவு    7.30 மணிக்கு

சாக்ஸஃபோன் கத்ரி கோபால்நாத்

 

டிசம்பர்  20 (2011) செவ்வாய்க்கிழமை

 

 

காலை  7.00  மணிக்கு

நாமஸங்கீர்த்தனம்   கடலூர் கோபி பாகவதர்

 

காலை  9.00  மணிக்கு

வாய்ப்பட்டு ஹைதராபாத் சுப்புலட்சுமி

 காலை  10.30 மணிக்கு

 

கீதம் மதுரம்திருமதி Dr. M.S. சுப்புலட்சுமி அவர்களுக்கு இசையஞ்சலி

 

மதியம்  1.00 மணிக்கு

வாய்ப்பாட்டு   அனந்த் ராவ்

 

பிற்பகல் 2.45 மணிக்கு

வாய்ப்பாட்டு மஹதி

 

மாலை  4.45  மணிக்கு

வாய்ப்பாட்டு  அபிஷேக் ரகுராம்

 

இரவு    7.30  மணிக்கு

ஃப்யூஷன் நந்தினி, தருண் பட்டாச்சார்யா, அபிஜித் பானர்ஜி

 

டிசம்பர்  21 (2011) புதன்கிழமை

 

 

காலை  7.00  மணிக்கு

நாமஸங்கீர்த்தனம் O.S. சுந்தர் பாகவதர்

 

காலை  9.00  மணிக்கு

ஃப்யூஷன் பிரயோக்

 

காலை  10.30 மணிக்கு

ஹார்ட்பீட் என்ஸெம்பிள்  ” கடம்” கார்த்திக்

 

மதியம்  1.00 மணிக்கு

வாய்ப்பாட்டு ராகினிஸ்ரீ

 

பிற்பகல் 2.45 மணிக்கு

பரதநாட்டியம் ஸ்ரீகலா பரத்

 

மாலை  4.45 மணிக்கு

வாய்ப்பாட்டுT.V. சங்கரநாராயணன்

 

இரவு    7.30 மணிக்கு

வயலின் கணேஷ், குமரேஷ்

 

டிசம்பர் 22 (2011) வியாழக்கிழமை

 

 

காலை  7.00  மணிக்கு

நாமஸங்கீர்த்தனம்உடையாளூர் கல்யாணராமன்

 

காலை  9.00  மணிக்கு

வாய்ப்பாட்டுDr. ராதாபாஸ்கர்

 

காலை  10.30  மணிக்கு

வீணை, சிதார்டாக்டர் நிர்மலா ராஜசேகர், கவுரவ் மஜும்தார்

 

மதியம்  1.00  மணிக்கு

வாய்ப்பாட்டு டாக்டர் ஆர்.கணேஷ்

 

பிற்பகல் 2.45 மணிக்கு

வாய்ப்பாட்டு கர்நாடிகா பிரதர்ஸ்

 

மாலை  4.45 மணிக்கு

வாய்ப்பாட்டு O.S. அருண்

 

இரவு    7.30  மணிக்கு

வாய்ப்பாட்டு பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியா

 

டிசம்பர் 23 (2011) வெள்ளிக்கிழமை

 

 

காலை  7.00  மணிக்கு

இலக்கியச் சொற்பொழிவு தேச. மங்கையர்க்கரசி       

 

காலை  9.00  மணிக்கு

வாய்ப்பாட்டுகாஷ்யப் மகேஷ்

காலை  10.30  மணிக்கு

 

கர்நாடக,  ஹிந்துஸ்தானி இசை (ஜூகல்பந்தி)அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம்

 

மதியம்  1.00  மணிக்கு

 பரதநாட்டியம்   சுபத்ரா மாரிமுத்து

 

பிற்பகல் 2.45  மணிக்கு

வாய்ப்பாட்டுஹரிணி

 

மாலை  4.45  மணிக்கு

வாய்ப்பாட்டுP .உன்னிகிருஷ்ணன்

 

இரவு    7.30 மணிக்கு

வாய்ப்பாட்டுசுபா முட்கல்

 

டிசம்பர் 24 (2011) சனிக்கிழமை

 

 

காலை  7.00  மணிக்கு

சங்கீத உபன்யாசம்சுசித்ரா 

 

காலை  9.00  மணிக்கு

பரத நாட்டியம்அபிமித்ரா   

 

காலை  10.30  மணிக்கு

கிடார்பிரஸன்னா

 

மதியம்  1.00  மணிக்கு

பரதநாட்டியம்வினிஷா கதிரவன்

 

பிற்பகல் 2.45  மணிக்கு

வைப்ரேஷன்ஸ்திருவாரூர் வைத்தியநாதன்

 

மாலை  4.45  மணிக்கு

வாய்ப்பாட்டுப்ரியா சிஸ்டர்ஸ்  

 

இரவு    7.30  மணிக்கு

வாய்ப்பாட்டு சுதா ரகுநாதன்

 

டிசம்பர் 25 (2011) ஞாயிற்றுக்கிழமை

 

 

காலை  7.00 மணிக்கு

சங்கீத உபன்யாசம் தாமல் ராமகிருஷ்ணன்

 

காலை  9.00 மணிக்கு

பரதநாட்டியம் மஞ்சுளா ராமசாமி

 

காலை  10.30 மணிக்கு

வாய்ப்பாட்டு    சிக்கில் குருச்சரண்

 

மதியம்  1.00 மணிக்கு

பரதநாட்டியம்மீனாட்சி ராகவன்  

 

பிற்பகல் 2.45 மணிக்கு

வாய்ப்பாட்டு ஷோபா சந்திரசேகர்

 

மாலை  4.45 மணிக்கு

வாய்ப்பாட்டு அருணா சாயிராம்         

 

இரவு    7.30 மணிக்கு

ஸரோட் உஸ்தாத் அம்ஜத் அலிகான்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.