காக்கையும், குருவியும்

செல்பேசி கோபுரங்கள்

உயர்ந்தன.
சிட்டுக்குருவிகளின் ஓசை
கைபேசிகளின்
அழைப்புமணிகளில் மட்டும்!

கோபுர தரிசனம்
குருவிகளுக்கு சொர்க்கம்
மலிந்து போகிறது
மனித வர்க்கம்.

அறிவியல் சார்ந்து
வாழும் சமூகத்தில்
காக்கையும் குருவியும்
யாரின் சாதி?

 

படத்திற்கு நன்றி : https://www.google.com/search?aq=f&gcx=w&sourceid=chrome&ie=UTF-8&q=sparrow+phot

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காக்கையும், குருவியும்

  1. விஞ்ஞானம் முன்னேற முன்னேற, மனிதன் இயற்கையை இழந்து நிற்கிறான் என்பதை வெளிப்படுத்திய நல்ல கவிதை

Leave a Reply

Your email address will not be published.