ஜெ.ராஜ்குமார் 

வெள்ளி ஓடைகள்

துள்ளிப் போகுதே – வேதனைகளைத்

தள்ளிப் போட்டதே…

 

பூத்திடும் ஒவ்வொரு பூவிலும் – தன்

புன்னகை சேர்த்ததே!

பொங்கிடும் கங்கையும் – வெண்

பொங்கலாய் ஆனதே!

 

வானவெளியிலே வட்டம் இட்டதே

நிலவு என்றொரு மலர் மலர்ந்ததே!

 

புள்ளிக் கோலங்கள் போட்டு விட்டது

நட்சத்திரங்களாய் மாறிப் போனது!

வானமே –

வெள்ளிப் பூந்தோட்டமாய்க் காட்சி தந்தது!        

 

படத்திற்கு நன்றி: http://downloads.zdnet.com/abstract.aspx?docid=803971

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க