சத்யாவின் கீபோர்டு இசை ஆடியோ வெளீயீடு December 10, 2011

1

இனிய சனி வாரம் காலை, இசை இதயத்தைத் தொட்ட நாள், சனிக்கிழமை திருப்பதிப் பெருமாளுக்கு உகந்த நாள். அதனால் தானோ என்னவோ, திரு. கிருஷ்ணபாபு, திருப்பதி தம்பதியர் தங்கள் செல்ல மகன் சத்யநாராயணனின் இசைத் தொகுப்பு (Musical Album) வெளியீட்டு விழாவை இன்று அமைத்திருந்தனர். காலை 8.55-க்கு நிகழ்ச்சி துவக்கம்.சிற்றுண்டி அருந்த நேரமின்மையால் நேரே அரங்கத்துக்குச் சென்றோம். 

பிரம்ம கான சபா, லஸ் கார்னர். உள்ளே நுழைந்ததும் தம்பதியர் அனைவரையும் இன்முகம் காட்டி வரவேற்றனர். செவிக்கு உணவில்லாத பொழுதுதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இது சொல் வழக்கு, ஆனால் இவர்களோ உள்ளே நுழைந்ததும் சிறிது வயிற்றிற்கு அருந்தி விட்டு உள்ளே செவி இன்பத்தைப் பருகலாம் என்று அன்புக் கட்டளை இட்டனர்.  

அரங்கத்தில் அந்தக் காலை நேரத்தில் நல்ல கணிசமான ரசிகர்கள், நண்பர்கள், ஊடக உறவுகள் என அனைவரும் நிறைந்திருந்தனர். திரு. ரங்கநாதன் அவர்கள் நிகழ்ச்சியை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தார்.

தொகுத்து வழங்கினார் சத்யநாராயணன்,

அடையாறு பாலசுப்ரமணியம் – நாதஸ்வரம்,

அடையாறு செந்தில் குமார் தவில்,

சுவாமிநாதன் மிருதங்கம்

இசை வெள்ளத்தில் அனைவரையும் கரைக்க ஆரம்பித்தனர், நவராக மாலிகா வர்ணத்தில் ஆரம்பித்து, கம்பீர நாட்டை மல்லாரியில், ராகமாலிகா கற்பனா ஸ்வரம் பேஷ் பேஷ், ஹரிகம்போதியில் தியாகராஜரின் தினமணி வம்ச கிருதியும், பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலும் கேட்டவர்களைப் பரவசப் படுத்தியது , சின்னஞ்சிறு கிளியே பாடல் அனைவரையும் மெய் மறக்கச் செய்தது.  

வயலின் மேதை டாக்டர் திரு. M.சந்திரசேகர் அவர்கள் முன்னமே வந்து இசையை ரசித்துக் கொண்டிருந்தார். மிருதங்க வித்வான் டாக்டர். உமையாள்புரம் சிவராமன் அவர்களும் திரு. நடராசன், முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர், அவர்களும் வந்து விழாவைச் சிறப்பிக்கச் செய்தனர். கிரி ட்ரேடிங் நிறுவனமும் பிரம்மகான சபாவும் சத்யநாராயணனின் இசைத் தொகுப்பை (MUSICAL ALBUM) வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 

விழாவில் வயலின் மேதை திரு M.சந்திரசேகர் அவர்கள் சத்ய நாராயணனை மனதாரப் பாராட்டி, தான் பேசும் பொழுது கூட, வாய் பேசுகின்றது ஆனால் தன்னுடைய காதுகள் இன்னும் மல்லாரியில் மயங்கிக் கொண்டிருக்கின்றது என்று கூறி சத்யாவை மனதார வாழ்த்தினார். மேலும் அவர் கூறுகையில், கமகங்கள் கீ போர்டில் வராது, ஆனால் சத்யா அதை வர வைத்தது மட்டுமல்லாமல் பாடிய உணர்வே இருந்தது என்று சொன்னது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மிருதங்க வித்வான் டாக்டர் திரு. உமையாள் புரம் சிவராமன் அவர்கள் சத்யாவின் இசை ஆற்றல், இளம் வயது சாதனைகளை வெகுவாகப் பாராட்டி, சத்யாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோரையும் பாராட்டினார்.   

மேலும் திரு. சிவராமன் அவர்கள் “நானும் சந்திரசேகரனும் சத்யாவுடன் கச்சேரி வாசிக்க ரெடியாக இருக்கோம்” என்று கூறியது சத்யாவிற்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். மேலும் திரு. நடராஜன், பிரம்ம கான சபாவின் உப தலைவர் என்ற முறையில், “நீங்கள் அடுத்த டிசம்பரில் கண்டிப்பாக எங்கள் சபாவிலே வாசிக்க வேண்டும்” என்று கூறிய பொழுது திரு. சிவராமன் எழுந்து, “ஏன் அடுத்த டிசம்பர் வரை தள்ளிப் போடணும்? அதற்கு முன்னமே வாசிக்க நாங்கள் ரெடி”, என்று கூறியது சத்யாவிற்கு பாக்கியமோ பாக்கியம்! 

அந்தத் திருநாள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.  மழலைகள் இசை என்றாலே மனம் மகிழும்.மழலைப் பருவம் முதல் இசை மழலைகளின் அரவணைப்பில் வளர்ந்து இன்று இமயம் தொடப் புறப்பட்டிருக்கும் சத்ய  நாராயணனை ராம்ஜி இசை மழலை Ramjhi Isaimhalai அவர்கள் வெகுவாகப் பாராட்டி சத்யாவின் தொடர் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். திரு. நல்லி குப்புசாமி அவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன்னமே வந்து சத்ய நாராயணனை வாழ்த்திச் சென்றார், நேரமின்மை காரணமாக. 

தகவல் களஞ்சியம் திரு. நடராசன் (முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர்) அவர்கள் சத்யாவின் ஆரம்ப நாள் முதல் அவரது வளர்ச்சியைக் கண்டு பெருமை கொண்டு, அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார். விழாவில் சத்யாவின் நான்கு இசைக் குறுந்தகடுகள் வெளியிடப் பட்டது. அவை சத்யாவின் வெற்றிப் படிகளுக்கு வழியாக இருந்தவர்கள் முறையே கௌரவிக்கப் பட்டபின், அவர்களால் பெற்றுக் கொள்ளப் பட்டது. இறுதியாக சத்யநாராயணன் தனது நன்றி கலந்த வணக்கத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொண்டார், விழாவில் நாதஸ்வர வித்வான் அடையாறு பாலசுப்ரமணியன், தவில் வித்வான் செந்தில்குமார், மிருதங்க வித்வான் சுவாமிநாதன், தாளம் ராஜேஷ் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை இந்தத் தொடர்பிலும் 

https://picasaweb.google.com/113488920649341170028/GiriTradingAlbumLaunchDecember102011?authuser=0&feat=directlink  

நிழல்படத் தொகுப்பை இந்தத் தொடர்பிலும்

http://www.youtube.com/playlist?list=PL80205959EAE6B250 காணலாம்.  

மற்றும் சத்ய நாராயணனின் இசைக் குறுந்தகடுகளை கீழ்க் கண்ட தொடர்புகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  

DECEMBER SEASON 2011 – LIVE AT BHARATIYA VIDYA BHAVAN-MYLAPORE – 

http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0023589

ANANDAM – CARNATIC CLASSICAL ON KEYBOARD  – http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0021886

MADHURAM – CARNATIC CLASSICAL ON KEYBOARD  – http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0021883

MANOHARAM – CARNATIC CLASSICAL ON KEYBOARD  – http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0021885

SUKHANUBHAVAM – CARNATIC CLASSICAL ON KEYBOARD – http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0021884

BHARAT SANGEET UTSAV 2006 – http://www.addkiosk.in/show_album.ASP?album_code=ABM0000629

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சத்யாவின் கீபோர்டு இசை ஆடியோ வெளீயீடு December 10, 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.