நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (4)

தி.சுபாஷிணி

ஆழிமழைக் கண்ணனை அழைத்து நீ

ஆழிநீரை மழையாய்ப் பொழியச் செய்தாய்!

அலங்காரம் தவிர்த்து அறுசுவை நீக்கி

செய்யாதன செய்யாது சொல்லாதன சொல்லாது

கேட்போர்க்கும் கேளாதார்க்கும் உறுபசி நீக்கத்

தொடங்கிவிட்டோம்! எழுவாயே ஆட்கொள்ள நாச்சியாரே!

 

படத்திற்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4173

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (4)

 1. கடலிலிருந்து நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாக மாறி
  திரும்பவும் இம் மண்ணிற்கு மழையாகப் பொழிகிறது என்ற
  விஞ்ஞானத்தை 2000 வருடங்களுக்கு முன்பே வள்ளுவர்
  ” நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
  தான்நல்கா தாகி விடின்” என்ற குறளில் சொல்லியுள்ளார்.
  பின்னர் வந்த ஆண்டாளும் அதே விஞ்ஞானத்தை தன்
  மழைப் பாட்டான “ஆழி மழைக் கண்ணா” பாடலிலும்,
  ஆண்டாளை அடியொற்றி மாணிக்கவாசகர் தன் மழைப்
  பாட்டான ” முன் இக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்”
  என்ற பாடலிலும் சொல்லியுள்ளது தமிழர்கள் விஞ்ஞானத்தில்
  எவ்வளவு திறம்பட விளங்கியுள்ளார்கள் என்பது வியக்க
  வைக்கிறது!
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published.