ஆப்பிள் கேக் – கிறிஸ்மஸ் ஸ்பெஷல்!
உமா சண்முகம்
மைதா மாவு -150 கிராம்
வெண்ணெய் -120 கிராம்
சர்க்கரை -150கிராம்
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி
முட்டை -3
வெண்ணிலா எஸன்ஸ் -சில துளிகள்
செய்முறை
1.வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
2.மைதா மாவு பேக்கிங் பவுடரை இருமுறை சலிக்கவும்.
3. முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு வெண்ணெயும் சர்கரையும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக் கொண்டே இருக்கவும். எஸன்ஸ் சில துளி விட்டுக் கொள்ளவும்.சலித்த மைதா மாவை கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
4.கேக் பேக் செய்யும் 9” தட்டில் போட்டு 375 F சூட்டில் சுமார் 30 நிமிடம் முதல் 35 நிமிடம் வரை பேக் செய்யவும்.
5. நன்றாக பேக் ஆனதும் எடுத்து சூடு தணிந்தவுடன் கேக்கை நன்றாக தூள் செய்து கொள்ளவும்.
6.உதிர்ந்த கேக்குடன் இரண்டு மேஜைக்கரண்டி ஜாம் கலந்து கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். கொய்யாப்பழ அளவிற்கு கெட்டியாக உருட்டிக் கொள்ளவும்.
இதற்கு மேலே சர்கரை பூச்சு செய்வதற்கு தேவையான பொருட்கள்;-
ஐசிங் சர்க்கரை -200கிராம்
பச்சை கலர் – 4துளிகள்
தண்ணீர் -2 மேஜைக்கரண்டி
செய்முறை
சர்க்கரை தண்ணீர் பச்சை கலர் இவற்றை கெட்டியாக கரண்டியினால் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வைத்து கை பொருக்கும் அளவிற்கு சூடு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கி உருட்டி வைத்திருக்கும் கேக்கை அதில் வேகமாக ஒரு பாகத்தை தோய்த்து அதை ஒரு பேப்பர் கப்பில் தோய்த்த பாகம் மேலே தெரியும்படி வைக்கவும்.
ஆப்பிள் போல தோற்றமளிக்க சிறிது ராஸ்ப்பெர்ரி ரெட் கலரை பிரஷில் எடுத்து மேலே சிறிது தடவவும்.ஒரு இலவங்கத்தை கேக்கின் மேல் பதிய வைக்கவும்.
இப்போது பார்த்தால் காம்புடன் கூடிய அழகிய ஆப்பிளை போல் தோற்றமளிக்கும்.
படத்திற்கு நன்றி : http://www.misquincemag.com/quinceanera-plan/organize/quinceanera-cakes