நானெனும்
திருவாரூர் ரேவதி
வண்டுகள்
என்னில் பூக்கும்
மலர்கள்
விண்ணில் தவழும்
நிலவும்
விழுந்து கிளம்பிடும்
விதையும்
பூவுலகில் பூத்து விட்ட
களிப்பில் பூத்திடும்
கருத்தடம் மறக்கும்
தவழும் என்னருமை
தென்றல்
தரணி கொழித்திடும்
கொண்டல்
ஏறிவிட்ட எக்களிப்பில்
வாட்டினாலும்
வாழ்வேனே ஏராளமாய்
வாசம் தந்து..
வாசமுடன் வாழும்
புதுப் பூவை
வாழ்த்தி வரவேற்கும்..
-செண்பக ஜெகதீசன்…
ஒரு முறைக்கு இரு முறை படிக்க வைத்த கவிதை.. உள் பொருள் பூடகமாகவே இருந்தாலும் அதுதானே கவிதையின் அழகு !
Simply Superb