விஜய் தொலைக்காட்சியில் “சென்னையில் திருவையாறு”
சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற “TVH சென்னையில் திருவையாறு” இசைக் கச்சேரிகளை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்பட்ட மார்கழி மாத சிறப்பு இசை நிகழ்ச்சியான சென்னையில் திருவையாறு, ஆறாவது ஆண்டாக, வெற்றிகரமாகக் காமராஜர் அரங்கில் 2010 திசம்பர் 18 முதல் 25 வரை கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் 45க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். எழுபத்தைந்தாயிரம் ரசிகர்களுக்கும் மேல் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் இசை வித்வான்களும் இசைக் கலைஞர்களுமான டி.என். சேஷகோபாலன், பி.எஸ். நாராயணசுவாமி, சந்தானகோபாலன், டிவி. சங்கர நாராயணன், ஓ.எஸ். அருண், உடையலூர் கல்யாணராமன், சுதா ரகுனாதன், நித்யஸ்ரீ மகாதேவன், ஷோபா சந்திரசேகர், சேலம் ஜெயஸ்ரீ, மகாநதி ஷோபனா, மஹதி, பிரியா சகோதரிகள், எஸ். சௌமியா, சிக்கில் குருச்சரண், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அனுராதா ஸ்ரீராம், ராஜேஷ் வைத்தியா, கணேஷ் குமரேஷ், மீனாட்சி ராகவன் உள்ளிட்ட பலரும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் இந்தியத் திரை உலகின் பிரபல பாடகர்களான எஸ்.பி. பாலசுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், ஹரிணி, பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா, பண்டிட் மோகன்பத் ஆகியோரும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 2011 ஜனவரி 03 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கும் அதே நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
“TVH சென்னையில் திருவையாறு” நிகழ்ச்சியில் முதலாவதாக அறுபதுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் பாடிய பஞ்சரத்தினக் கீர்த்தனைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
ஜனவரி 4ஆம் தேதி நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி,
5ஆம் தேதி சுதா ரகுநாதன் கச்சேரி,
6ஆம் தேதி சிக்கில் குருசரண் கச்சேரி,
7ஆம் தேதி ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோரின் நிகழ்ச்சி,
10ஆம் தேதி பாடகர் உன்னிகிருஷ்ணன் கச்சேரி,
11ஆம் தேதி பிரியா சகோதரிகளின் கச்சேரி,
12ஆம் தேதி மகாநதி ஷோபனாவின் கச்சேரி,
13ஆம் தேதி ஓ.எஸ். அருண் கச்சேரி
14ஆம் தேதி பாடகி ஹரிணியின் கச்சேரி ஆகியவை ஒளிபரப்பாகின்றன.
இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அறுபது நாட்களுக்கு அனைத்துக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும். நேரடியாகக் காணத் தவறிய நேயர்கள் இந்த நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் கண்டு மகிழலாம்.
===================
படத்திற்கு நன்றி – b.balaji