ஒரு காலம்
பிச்சினிக்காடு இளங்கோ
எடுத்து உதறித்
தயார் செய்தது…
படுக்கையறையில்
தலையணை அருகில்
தாகத்திற்காகத் தண்ணீர் வைத்திருந்தது..
இருக்கையில் உட்கார வைத்துப்
பரிமாறியது…
இலையில்
குறையக் குறைய எடுத்து வைத்தது..
அடுத்த வேளைக்கு
என்ன வேண்டும்?
விருப்பம் கேட்டுச் சமைத்தது…
நாளைக்கு நான் உடுத்தும்
உடையைத் தயார் செய்தது
குளிக்கும் வரை காத்திருந்து
உதவி செய்தது எல்லாம்
மழையின் சாரலாய் ஈரப்படுத்துகிறது
வீட்டுக்கு வெளியே இருந்து
தனியாய்ச் சாப்பிடும்போது
படத்திற்கு நன்றி: http://www.dawn.com/2011/10/21/bangladesh-old-alone-and-without-support.html
அத்துடன், இத்துனை உபசரிப்புக்கும் எப்போதாவது, நன்றி சொன்னது நினைவிருக்கிறதா?
உபசரிப்பில் குறை இருந்தபோது, முகம் சுளித்து கடுஞ்சொல் சொன்னதும் நினைவுக்கு வருகிறதா?