கற்றுத் தரும் இயற்கை
செண்பக ஜெகதீசன்
மண்ணில் குதித்திடும் அருவி.
சிலையாய் நின்றிடும் தெய்வம்
சிந்திடும் அழகுடன் அருளும்,
இலையில் விழுந்திடும் சோறே
ஏழையின் பசியை ஓட்டும்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே…!
அலையில் கதை சொல்லும் கடலும்,
ஆற்றில் காண்பது முயற்சி,
வலையில் வீழ்ந்திடும் மீனும்
வல்லமை காட்டிடும் புலியும்,
தலைகீழ் தொங்கிடும் வெளவால்
தந்திடும் பலப்பலப் பாடம்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே…!
படத்திற்கு நன்றி:http://www.soultravelmultimedia.com/2011/09/04/30-breathtakingly-beautiful-nature-wallpapers


எளிய நடையில் புணையப் பட்ட இனிய கவிதை. நன்று!