யாதினும் உயர்ந்த எம் காதல்!

சுபாஷிணி

யாதினும் யாதினும்
ஆதாம் ஏவாளின்
ஆதி காதலினும்
ஆதி பகவனின்
அருட் காதலினும்
அப்பரென நால்வரின்
அழகு தேவாரக் காதலினும்
அடியார்களின் இறை
அடிமைக் காதலினும்
அழல் சிவப்புச் சிவனைத் தலை நடையால் கண்ட காதலினும்
ஆழ்வார்களின் தாசானு தாசனாய்
அஞ்சிறு பெரு மடலேறிய
அளப்பறியா அவஸ்தைக் காதலினும்
அத்தனையும் ஒப்புக் கொடுத்த
ஆண்டாளின் காதலினும்
அன்புக்காக அன்பு செய்த
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பாடிக் கொடுத்த, பாவைக் காதலினும்
ஆடி ஆடி அகம் கரைந்து
பாடிப்பாடிப் பரவசமாய்
கண்ணீர் மல்கும் காதலினும்
தேவமைந்தனையும் திருச்சபையையும்
நேசிக்கும் உன்னத சங்கீதக் காதலினும்
உயர் இயற்கையாய் அகம் போற்றும்
சங்கத் தமிழ்க் காதலினும்
ஒங்குயர்த் தன்னேரில்லா,
காவியக் காதலினும்
யாதினும் யாதினும்
யெம் காதல் உயர்ந்ததே
காதலுக்காய் காதலிப்பதால்!

 

படத்திற்கு நன்றி :

http://onelovephoto.typepad.com/

2 thoughts on “யாதினும் உயர்ந்த எம் காதல்!

 1. ஏமாற்றி விட்டீர்களே –  கடைசியில் 
  யாவற்றையும் பட்டியலிட்ட நீங்கள் –
  எம்  காதலெனப் பொத்தம் பொதுவாய் பேசி 
  பொசுக்கென ஆக்கி 
  சுவாரஸ்யம் காணாமல் போய்விட்டதே!

  பட்டியலில் இருப்பவற்றை – தூக்கிச் சாப்பிடும் படியானதானதொரு காதல் இருந்திருக்க வேண்டும்! அதற்காகத்தான் இத்தனை அச்சசாரமும்!

  சொல்லத் துடிக்கும் மனசு இருக்கையில்  
  சொல்லாமல் விடுத்த காலியிடம் இங்கு தெரிகிறது!
    
  அதைக்  கொஞ்சம் ரகசியமாகவேனும் இங்கு வெளியிட்டிருக்கலாமே!

  அந்த உன்னதக் காதல் எவர்  செய்தார் !  
  அவர் –
  காதலுக்காய் காதலித்தது எவரை அல்லது எதனை? 

  காதலுக்காய் காதலிப்பார் எது கண்டும் அச்சம் கொள்வதில்லையே!

  குறைந்த பட்சம் எனக்கு மட்டும் கேட்கும் படியாய் காதில் அக்காதல்? 

   

 2. Ithu kaathalukkaana kaathal,kaathalai kaathlippa thahave aasiriyar vehu inghithamaai pativu seithnullar.Naam ellaa unavirkkum sthulaa vadivam kodukka yelaathu.Kavingar ingu uatharanammai koorappdaum ella puraana ,Ithikaasa kaathalinum inraya saamanya kaathal ” Onghi Uyarntha, Thun niharilla” earkanve sollaapadum Yaathinum,Yaathinum  ena iru murai urakka koori eliyoor kaathalai kondaaduhiraar.Eatharkkaai,avar nammai nonbu noorkka sollavillai.vadakuu irukka sollavillai, kaadu ,malai sutra sollavillai,Mikka pulamai udan Pathiham,Paasuram paada sollavillai.Ithu vehu elimai yai anbu seithalai pahirvu seihirathu, Nichyammai Bothikka villai,Aaha ithu oru saatharangalin kaathal geetham.Ithu oru kavithai nuharvonin  unaviru.Evan Pulavan,Paanan,kavingan,Vidhvaan,Perasiryan allan.-siruvan sandru-chennai

Leave a Reply

Your email address will not be published.