மூட நம்பிக்கை
தேவா
கழுத்தில் தாயத்துக் கட்டுதல்,
மூட நம்பிக்கையாம்,
சொன்னது தந்தை..
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்யச் சொன்னதும் அவரே;
தந்தைக்குத் தெரியாது,
இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்று.
படத்திற்கு நன்றி:http://www.dailymail.co.uk/news/article-508547/Numbers-claiming-unemployment-benefit-drops-32-year-low.html