விசாலம் ராமன்

மகளிர் தினம் என்றால் முதலில் நாம் நினைக்கவேண்டியது நம் தாயைத்தான் .தாயைச்சிறந்த கோயிலுமில்லை என்று கேட்டுமிருக்கிறோம் .பின் நாம் நினைக்க வேண்டியது .வீட்டில் தாய் தந்தையைப் பெற்றெடுத்த அம்மாக்கள் கல்வி கற்றுக்கொடுத்த.பள்ளி ஆசிரியை, நம் தாய் நாட்டிற்குப்பெருமை சேர்த்த பெண்மணிகள், ஆன்மீகத்தில் உயர்ந்த பதவிப்பெற்ற பெண்மணிகள் .தாய்நாட்டைக்காத்த வீராங்கனைகள்..

மகளிர்தினம் என்று வந்தாலும் எத்தனை கணவர்கள் மனைவிமார்களின் உணர்வைப் புரிநதுக்கொண்டு.. நடக்கிறார்கள்! ஏதோ ஒரு சிலர் இருக்கலாம் .. இதைப்பற்றி பரிசீலனைச் செய்ய சில வீடுகள் சென்று பெண்களிடம் பேச்சுக் கொடுத்தேன் .

முக்கால்வாசி பெண்மணிகளின் கதைகள் ஒரே மாதிரிதான் இருந்தது ,நான் சொல்லும் பெண்மணிகள் திரிசங்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.அதாவது பழைய கலாச்சாரமும் விடமுடியாமல் புது மாற்றமும் ஒத்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் எல்லோரும் ஐம்பது வயதைத் தாண்டினவர்கள்.. காலையில் கணவருக்குக் காப்பி கொடுக்கும் வேலையில் ஆரம்பிக்க இரவில் தான் முடியும். இத்தனை வேலைகள் செய்தாலும் ஒரு பாராட்டோ அல்லது தட்டிக் கொடுத்தலோ கிடைக்காது .இதை எதிர்ப்பார்க்கவும் கூடாத கீதையில் சொல்லியிருகிறதே.” செயலைச்செய். .பலனை எதிர்ப்பார்க்காதே” என்பது போல உயர்ந்த நோக்கம்!

என் அம்மாவின் ஞாபகம் இன்று மிகவும் ஸ்பெஷலாக வரும் .12 வயதில் திருமணம் அவருடன் வந்தது அம்மியும்,ஆட்டுக்கல்லும் தான் இயந்திரம் போன்ற வாழ்க்கையில் ஒரு சுகத்தைக் கண்டார் போலிருக்கிறது .நான் அவரை என் சிறு வயதில் பல முறை சினிமா டிராமா என்று அழைத்தும் வர மறுத்து விடுவார்.,இதில் ஏதோமர்மம் உள்ளது என புரிந்த்துக் கொண்டேன்

என் திருமணம் நடந்தப்பின் என் அம்மா என்னுடன் வந்திருக்கும் வாய்ப்பு கிடைக்க நான் இந்த மர்மத்தைப்பற்றிக்கேட்டேன் .

“அம்மா எப்போ சினிமாவோ கச்சேரியோ டிராமாவோ இருந்தால் நாங்கள் ஆசையுடன் கூப்பிட்டாலும் நீங்கள் ஏன் வருவதில்லை .இன்று என்னிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.ப்ளீஸ்’

என் அம்மா சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்குப்புது குடித்தனம் வைத்து பொன்மலைக்கு வந்து ஒரு வருடம் ஆச்சு ..ஒருநாள். உன் அப்பா ஆபீஸ் போய்ட்டா. நான் சாப்பாடு முடிச்சுண்டு திண்ணைக்கு வந்து உட்காந்தேனா. அடுத்தாத்து மாமி எங்கிட்ட வந்தா ..”அடியே சரசு 1ஒரு சினிமா டிக்கட் இருக்கு .என் மாட்டுப் பொண்ணு வரலைன்னுட்டா …. நீ வாயேன் உங்காத்துகாரர் வரதுக்குள்ளே திரும்பிடலாம்” என்றாள்.

எனக்கு அப்போ வயசு பதினாலு தான் ஏதோ ஒரு சபலம் கிளம்பிட்டேன்”

‘அப்பறம் என்ன ஆச்சு அம்மா?’

“என் தலயெழுத்து அன்னிக்குன்னு உங்கப்பா தலைவலின்னு ஆத்துக்கு வந்துட்டா. பாத்தாக்க .வீடு பூட்டியிருக்கு .அப்படியே துர்வாசர் ஆய்ட்டார்.[அடுத்தாத்ல கேட்டிருக்கார். விஷயம் தெரிஞ்சோண்ண. இன்னும் கோபம் ..இந்த நேரம் பாத்து நானும் மாமியோட வீடு வந்தேன் .உன் அப்பாவைப் பாத்தேன்..

“உள்ள போகாதே கிளம்பு மன்னார்குடிக்கு. அப்படியே “ன்னு சொல்லி ஒரு வண்டியை பேசினா . தானும் கூட வந்து புக்காத்துல கொண்டு விட்டுட்டா.ஒரு வருஷம் என்ன பாக்கவேவல்லை .நானும் அன்னிக்கு சபதம் எடுத்துண்டேன் ஒரு சினிமாக்கும் போமாட்டேன்னு. எனக்கு இருக்கவே இருக்கு கல்லோரல் அம்மி சமையல்ன்னு……

நான் என் தாயைப்பிடித்தபடி அழுதுவிட்டேன் . பின் ஒருசந்தர்ப்பத்தில் என் அப்பாவுக்கு பெண்னின் உணர்வுகளைப் பற்றிக்கூறி கொஞ்சம் புரிய வைத்தேன்.என் அப்பாவும் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினார் ‘ பின் என் தாயுடன் சந்திரலேகா படம் பார்த்ததில் எனக்குப் பரமதிருப்தி.

இந்தக்காலத்தில் நல்ல மாற்றம்தான் ……ஆனாலும் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் தனமை இல்லாததால் விவாகரத்து அதிகமாகிறது என்பது உண்மைதானே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *