குப்பாம்மாவின் மகளிர் தினம்

விசாலம் ராமன்

வருடத்தில் ஒரு முறை மகளிர் தினம் .
வாழ்த்து தெரிவிக்கும் இனிய தினம்.
குப்பம்மாவுக்கோ என்றும் ஒரே தினம் .
குடிகார புருசன் அடிக்கும் தினம்.
பாத்திரம் கழுவி வரும் கூலி ,
புருசன் வீடு வர எல்லாம் காலி.
ரத்தம் சிந்தி உழைக்கும் பணம்.
இரக்கமின்றி அதைப்பிடுங்கும் குணம்.
கொடுக்க மறுக்க எழும் அங்கு யுத்தம்.
கொடுமையினால் சிந்தும் அங்கு ரத்தம்.
கழுத்தில் எஞ்சியது ஒரு தாலி
கணவன் கட்டிய ஒரு வேலி
ஏழைக்கு ஏது மகளிர் தினம்.
என்றும் மாடாய் உழைக்கும் தினம்.
பெண்ணுரிமை புரியும் காலம் என்றோ
பெண்ணுக்கு அன்றே மகளிர் தினம்

படத்திற்கு நன்றி:http://www.bbc.co.uk/news/world-south-asia-12660540

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க