இயற்கை
தமிழ்த்தேனீ
ஒன்பது வழிகள் வைத்தான்
உடல் விட்டு உயிர் போக
ஒரு வழியும் வைக்கவில்லை.
உயிர் வந்து உடல் சேர இறைவனிடம் நான் கேட்டேன்
இது என்ன ஓர வஞ்சனை ?
அவனளித்தான் பல பதில்கள்
அத்தனையும் புரியவில்லை,ஆனாலும்
ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு.
ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை
இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள
என்னாலும் முடியவில்லை,
நான் கூட அதன் பிடியில் தவிக்கிறேன் மீளாமல்
சொன்னால் நம்ப மாட்டாய்.
ஒரே ஒரு முறை விதைத்தேன் ப்ரபஞ்சம் வளர்ந்தது
பல முறை அழித்துப் பார்த்தேன் ஒன்றுமே பலனில்லை.
இனி இப் ப்ரபஞ்சம்
நானே நினைத்தாலும் அழிக்க முடியாது,
இயற்கைதான் கடவுள்.
இயற்கையை வெல்ல என்னாலும் முடியவில்லை
நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா உனக்கு?
கேள்விகள் கேட்பது சுலபம்.
உயிர் வந்து உடல் சேர
இயற்கையை வெற்றி கொள்ள
வழி இருக்கிறதா ?
என்னைக் கேட்டான் இறைவன்
என்ன பதில் நான் சொல்ல
உங்களுக்குத் தெரிந்தால் ரகசியமாய்
என்னிடம் சொல்லுங்கள்
அவனிடம் சொல்லுகிறேன்
படத்திற்கு நன்றி:http://www.wallpaper1080hd.com/desk/BigScreen/2560x1600lcd/2012/0106/31682.html
கவிஞர் நமது நண்பராயினும், புகழாமல் இருக்கலாமோ? அருமையான சிந்தனை. அதை பெருமிதம் செய்த கற்பனை (மாற்றி படித்தாலும் தப்பு இல்லை!) கவிதை நயம் பிரமாதம். ஐயா கவிஞரே! ஒரு சின்ன சேதி கேளும். அந்த இறைவன், ஏழ்கடல் தாண்டி, எம்மிடம் வந்து சொன்னான், “ சில நிகழ்வுகள் ஒரு தடவை தான் நிகழ்பவை. அது இயற்கை, இயற்கை என்று அனத்துகிறார்களே, அந்த சக்தியின் இயல்பு. அவள் தான் அம்பாள். சாத்திரம் படித்தாரோ, அந்த மதுபருகி? புராதன சனாதனத்தில் சக்தி வழிபாடு:Mother Goddess. கருதரித்தபோது உயிர்ப்பு அளித்தோம், யாம். உயிர் பிரியும் போது சாந்தி அளித்தோம்.” நனவில் வந்த கனவு ரகசியம் பேசியது.இன்னம்பூரான்10 02 2012
இயற்கையை வெல்லவும் இயலாது. புரிந்திடவும் முடியாது. அருமையான கவிதை.