யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

அன்பு நண்பர்களே,

செம்மொழித் தமிழை அறிவியல் தமிழாகக் கட்டிக் காக்க முனையும் ஆக்கப்பூர்வமானதொரு முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் நம் வல்லமை பெருமிதம் கொள்கிறது. அந்த வகையில், “அறிவியல் தமிழ் பல்கலைக்கழகம்” என்ற பெயரில் உருவாக்கம் பெற அரும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் ஒரு நாளில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்றாலும், ஆழ்ந்த ஈடுபாடும், கடின உழைப்பும், நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலமும், விரைந்து சாதிக்க இயலும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருப்பதாகக் கூறும் இவரைப் பற்றி இனி இவருடைய ஆக்கப்பூர்வமான அறிவியல், ஆய்வுக் கட்டுரைகள் மூலமே அறிந்து கொள்வோம்.

 

 

 மேலும் விபரங்களுக்குத் தொடர்புகொள்ள –

scientifictamiluniversity@gmail.com
  
www.ariviyaltamilmandram.org
 

Linguistic Medical Research in

Classical Tamil Litrature

அன்புடன்

ஆசிரியர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.