திருவாரூர் ரேவதி

மாளிகையில் ஜோதியாய்
வீட்டுக்குள் விளக்காய்
உள்ளுக்குள் உயிராய்

மௌனத்தின் வார்த்தைகளாய்
மந்தகாச புன்னகையாய்
இரவில் நிலவாய்
பட்டொளி வீசும் நேசம்

மூளையை அடக்கி
முழுதாய் ஆட்சியை
தானே ஏற்கும்
நாணத்தால் சுருங்கி
நான்காய் விரியும்

நீரான பனி
நெருப்பாய் ஆவதுண்டு
சில நேரம்

மிதமாய் நெஞ்சை
அணைத்த நேசம்
இருளாய் மாறி
இறுக்கவும் செய்யும்

சுழலில் சிக்கிய
சூழலால்

 படத்திற்கு நன்றி : 

http://media.photobucket.com/image/inspirational%20love%20quotes/x2xsimonx2x/Quotes%20Inspirational%20Love/Ballons.jpg?o=9

1 thought on “நேசம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க