நலமே நல்கும் நந்தன புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 

 

ராஜராஜேஸ்வரி

இன்பம் பொங்க அருள் தரும் “நந்தன” புத்தாண்டே வருக வருக,

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கிறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள்

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மரபாகும்.

புத்தாண்டு ஆரம்பிக்கும் விஷு முதல் தினத்தனறு அதிகாலையில் எழுந்து கண் விழித்தவுடன் காய்கறிகள், பழ [கனி] வகைகள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், தங்கம், வெள்ளி, முகம் பார்க்கும் கண்ணாடி முதலான மங்களப்பொருட்களை முதன் முதலாகக் காண்பதே விஷுக்கனி எனப்படும்.

மங்களப் பொருட்களை முதல் நாள் இரவே பூஜை அறையில் அழகாக அலங்கரித்து வைத்து விட்டு, காலை கண் விழித்தவுடன் முதலில் இவைகளைக் காண வேண்டும். இதனால் இந்த வருஷம் முழுவதும் வீடு செழிப்புடன் இருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கம் விஷூ புண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக கணிக்கின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *