கவிதைகள்

வளையல் துண்டுகளின் காட்சி

அன்பாதவன்
anbaathavan
அருகருகே தொடர்கிறது
நம் பயணம்.
சுவாரஸ்ய மவுனத்தோடும்
சுகமான நினைவுகளுடனும்
தண்டவாளங்களைப் போல
தகுந்த இடைவெளியோடு.

உடைந்த வளையல் துண்டுகளாய்
வீழும் உரையாடல்களைக் குலுக்க,
மனசின் முப்பட்டைக் கண்ணாடியில்
திரள்கின்றன புதுப் புது பொழிப்புரைகள்.

’பசிக்குதுடா’ – என்ற கெஞ்சலில்
எட்டிப் பார்க்கும் உன்னுள்
ஒரு குழந்தை.

பசியறிந்து ஊட்டிய விரல்களிலிருந்து
வழியுமுன் கடவுளின் மனிதம்.

சொல்லதிகாரம் திரண்ட
கட்டளைகளில்
நிமிர்ந்த பனையென உன்
ராட்சசம்.

சொல் செல்லமே
யார்தான் நீ?

=====================

படத்திற்கு நன்றி: அம்ருதா

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க