காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: நெருங்கிய உறவினர்களின் வருகையால், குடும்பத்திலும், பெண்கள் மனதிலும் மகிழ்ச்சி பெருகும். இந்த வாரம் மாணவர்கள் கையில் உள்ள பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளுக்காகக் கடன் படும் நிலை உருவாகாது. பொறுப்பில் இருப்பவர்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காமல் வேலைகளைச் செய்தல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாது. கலைஞர்கள் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால், ஏமாற்றத்தைத் தவிர்த்து, ஏற்றமான பாதைக்கு மாறலாம். பணியில் இருப்பவர்கள் வேலைப் பளுவிற்கேற்றவாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டால், வேலைகள் தேங்காமலிருக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்குச் செலவுகள் சில சமயம் கை மீறிச் செல்லும்.

ரிஷபம்: மாணவர்கள் உங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்துச் செயலாற்றுங்கள். வெற்றி வாகை சூடுவது சுலபமாகும். புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் கடன் அட்டைகளைக் கருத்துடன் கையாளவும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். பெண்களுக்கு மனரீதியாகச் சில தொந்தரவுகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், பணியை முடித்து விடும் ஆற்றலைப் பெறுவார்கள். கலைஞர்கள் விலை உயர்ந்த ஆபரணங்களையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளைக் கட்டுக்குள் வைக்கலாம். பணியில் இருப்பவர்கள், அலுவகத் தேர்வுக்காகத் தயார் செய்யும் முயற்சியில் இறங்குவது விரும்பிய பலனைத் தரும். புதிதாகப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவர்கள், கடமைகளை நிறைவேற்றுவதிலும் தனிக் கவனம் செலுத்துவது அவசியம்.

மிதுனம்: இந்த வாரத்தில், வியாபாரத்தில் காணும் மந்தமான போக்கை மாற்ற, சுய தொழில் புரிபவர்கள் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி வரும். பணியில் உள்ளவர்கள் முக்கியப் பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வது நல்லது. முதியவர்களுக்குப் பயணங்கள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இல்லத்தில் கருத்து வேறுபாடு ஆகியவை அதிகரிக்கும் போது பெண்கள் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. கலைஞர்கள் பொது இடம் மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்துப் பரிமாற்றங்களிலிருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்பையும் நேர்மையையும் மேலதிகாரிகள் பெரிதும் பாராட்டுவார்கள்.

கடகம்: மற்றவர்களுக்கு உதவும் குணத்தால், மாணவர்களின் தேவைகள் யாவும், சிரமமின்றிப் பூர்த்தியாகி விடும். வியாபாரிகள் புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருங்கள். லாபம் குறையாது. பெண்கள் பிள்ளைகளின் போக்கைக் கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாகச் செயல்படவும். சுய தொழில் புரிபவர்கள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது. மாணவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்களை இனங்கண்டு ஒதுக்கி விடுங்கள். வேலை பார்ப்பவர்களுக்கு, மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள், உடல் நலனில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: உத்தியோகத்தில் உள்ளவர்கள், பதவி உயர்வு பெற்று, வெளியிடங்களுக்கு மாற்றலாகி அதிக வசதியுள்ள இடங்களில் பணி புரிவார்கள். வியாபாரிகளின் கையைக் கட்டிப் போட்டிருந்த பொருளாதாரம் இந்த வாரம் சரளமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் வேளை தவறிய உணவு, அலைச்சல் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பதோடு வேண்டிய யோசனைகளும் கிட்டும். வியாபாரிகள் பண விஷயங்களில் அலட்சியமாக இருந்தால், கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை ஏற்படும். பொறுப்பில் உள்ளவர்கள், வாரப் பிற்பகுதியில் இருந்து சற்று நிதானத்துடன் செயல்பட்டுப் பலரும் பாராட்டும் அளவிற்குச் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள்.

கன்னி: பொது வாழ்வில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் முன்பின் யோசியாமல் எந்த வேலையிலும் இறங்காதீர்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுதல் அவசியம். சில நேரங்களில் நண்பர்களே உங்களை எதிரிகளாய்ப் பார்க்கும் நிலை உண்டாகும். எனவே பணியில் உள்ளவர்கள், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு வரும் ஒப்பந்தங்களைச் சிலர் குறுக்கு வழியில் தட்டிப் பறிக்க முயலுவார்கள். சூழலுக்கு ஏற்றவாறு நிதானமாகப் பேசி நினைத்த காரியத்தைப் பக்குவமாக முடித்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. வியாபாரத்தில் திடீரென்று சிக்கல்களும் நெருக்கடிகளும் தோன்றி நீங்கும். பண் விவகாரங்களில், வியாபாரிகள் ஆலோசித்துச் செயல்படவும்.

துலாம்: பெண்கள் விலை உயர்ந்த சாதனங்களை விவரமறிந்தவரிடம் கொடுத்துப் பழுது பார்த்தால், வீண் செலவுகள் அதிகரிக்காது. குடும்பத்தில் சிறு சிறு பூசல்கள் தோன்றி மறையும். மாணவர்கள் பழகிய நண்பர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் நிலையும், அதனால் சில சிக்கல்களையும் சகித்துக் கொள்ள வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பொறுப்பில் இருப்பவர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்தாலே சங்கடங்கள் தானே குறையும். பணியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் உயர் அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம். கலைஞர்களுக்குப் புதிய தொடர்புகளால் வருமானம் பெருகும். சுய தொழில் புரிபவர்கள், அவசியச் செலவுக்கு என்று எடுத்து வைக்கும் பணம் அநாவசியமாகக் கரைந்து போகும்.

விருச்சிகம்: மாணவர்கள் தவறான வழிகாட்டலுக்குத் தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். வியாபாரிகள், சரக்குப் போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் காசோலை மற்றும் வாக்குறுதி வழங்குதல் – இரண்டிலும் நிதானமாக இருப்பது நல்லது. பெண்கள் உறவுகளிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பு ஏற்படாது. கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல பெயரோடு கணிசமான தொகையும் கையில் வந்து சேரும். இந்த ராசிக்காரர்கள், வயிறு சம்பந்தமான நோய்களைய்த் தவிர்க்க, உணவு விஷயத்தில் கட்டுப்பாடாய் இருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள், அதிக விளம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், வீண் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

தனுசு: சுய தொழில் புரிபவர்கள் மனக் குழப்பம் உங்களின் திறமையைப் பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். தொழிலில் இருந்த இடைஞ்சல்கள் தானே விலகும். உறவினர் வருகையால், பெண்களின் வேலைப்பளு சற்றே கூடும். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே தன் வேலைகளை முடிப்பதில் விழிப்புடன் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் சக ஊழியரின் பணிகளையும், பொறுப்புக்களையும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும். எந்தச் சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் வாரம் இது. பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், இழப்புகள் குறையும். பொறுப்பில் இருப்பவர்கள், முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முன்னேற்றம் கூடும்.

மகரம்: கலைஞர்கள், வேலையாட்கள் முன் சொந்த விஷயங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாகச் செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவதுடன், வாக்குறுதிகளையும் அள்ளி வீசாமலிருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். கலைஞர்கள் அனுசரித்து நடப்பதன் மூலம், புதிய ஒப்பந்தங்களைத் தன் வசம் வைத்துக் கொள்ளலாம். வார முதலில் வேலைப்பளுவின் காரணமாக வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று நெருக்கடியான வாரமாக அமையும். புதிய பொருட்களால், இல்லம் பொலிவு பெறும்.

கும்பம்: பெண்கள் தங்கள் மனதில் பட்டதை வெளியில் சொல்லுவதிலும், சாதுரியமாகச் செயல்பட்டால், மற்றவர்களின் வெறுப்பிற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளலாம். நண்பர்கள் தரும் தெம்பால், மாணவர்கள் சவாலான காரியங்களையும் முடிக்கும் திறமையைப் பெறுவார்கள். வியாபாரிகள் சலுகைகளைப் பெற முறையற்ற வழிகளை நாடாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பணியில் உள்ளவர்கள் புதுப் பொறுப்புகளைத் தக்க ஆலோசனை பேரில் ஏற்றுக் கொள்வது நலம். சோர்வும், தடுமாற்றமும் உங்களின் வேகத்தைக் குறைக்கலாம். எனவே முதியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும். புதிய இடங்களில் வேலை செய்பவர்கள், அதிக அலைச்சல், அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். பொது வாழ்வில் உள்ளவர்கள், செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள், புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு அதிகம் மயங்காமல் இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

மீனம்: வியாபாரிகள் சரக்குகள் தேங்குவதைத் தவிர்க்க, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவற்றைத் தருவித்துக் கொள்ளுதல் புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் புதிய முயற்சிகளில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் வலுவில் வரும் வம்புச் சண்டைகளிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் எடுக்கும் முயற்சிகள், சிறிது தேக்கத்திற்குப் பின் விறுவிறுவென்று நடைபெறும். அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களில் முழுக் கவனத்துடன் இருப்பது நல்லது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பேச்சைக் குறைத்துச் செயலில் கவனத்தைத் திருப்பினால், விரும்பிய நல்ல பெயர் கிடைப்பது உறுதி. விழா விருந்துகளுக்குச் செல்லும் போது, பெண்கள் தேவையில்லாமல் உறவுகளிடம் கடன் வாங்கிச் செலவு செய்வதையும், வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் குறைப்பது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.