இலக்கியம்கவிதைகள்

உடை மாற்றும் கனா

உமா மோகன்

உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி

 

படத்திற்கு நன்றி:http://womenfashioncostumes.com/?p=190

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க