விற்றே வாங்கலாம்!
வையவன்
விற்றே வாங்கலாம்
விற்க வந்தான் பரதேசி
விலை பேசினான் சுதேசி
படிந்தது பேரம்
கைமாறியது தேசம்
தலைமுறைகள் கழிந்து
கண்ணீர் சிந்திக் குண்டடிப்பட்டு
சிறையில் அடைந்து
கொடிகள் தூக்கி
உப்புக்காய்ச்சி
மறுமுறை நடந்தது
கைமாற்றம்
ஏன் சிரமமென்று
விற்றே வாங்கிக்கொள்ள
வந்திருக்கிறது உலகமயமாக்கல்!
படத்திற்கு நன்றி
http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=84867
