செண்பக ஜெகதீசன்
பஞ்சுப்பொதி மேகங்கள்
பட்டுவிட்டால் தலையில்,
பாழாகிவிடும் இளமையென்று
பயந்து
தள்ளிப்போகச் சொல்லி
தலையசைக்கின்றன
வானுயர்ந்த
வனத்து மரங்கள்…!
மண்ணில்
மனிதனிடம் கற்ற பாடமோ…!
படத்திற்கு நன்றி
http://www.123rf.com/photo_3919726_tall-pine-trees-on-background-a-blue-sky-with-clouds.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…