ஆனந்தக்கண்ணீர்
மாமா
என்மீதான உங்கள்பாசம்
அலாதியானது
உங்களைப்போல்
யாரும் என்மீது
அக்கறை காட்டவில்லை
சொல்லாமல்
உள்ளுக்குள்
ஒரு சேதி இருந்தது
உங்களிடம்
எல்லோரும் எதிர்பார்த்தார்கள்
என்னிடம் நீங்கள்
ஒரு வாக்குறுதி
கேட்பீர்கள் என்று
கேட்டால்
நீங்கள் காட்டிய பாசம்
கறைபடும் எனக்கருதி
கண்ணீரைமட்டும்
கசியவிட்டீர்கள் கன்னத்தில்
மரணத்தின் அருகில்கூட
மனஉறுதி குலையாது
மறைந்தீர்கள்
உங்கள் மரணம்
ஆறுதலாய் அமைய
அம்மாவும் அன்று
உறுதியளித்தார்கள்
உங்களிடம்
நானும் சொல்லியிருக்கலாம்
என் உறுதிமொழியை அன்று
அன்று நான் சொல்லியிருந்தால்
உங்கள் கன்னத்தில்
கசிந்த கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராகியிருக்கலாம்
படத்திற்கு நன்றி
http://www.kenyan-post.com/2012/05/african-man-found-crying-in-street.html