तीसरा पहर
by Mohan Rana

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर
और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !
क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में
दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को – देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से

நடுநிசிக்குப் பின்

நான் தொலை தூரத்து நட்சத்திரங்களைப் பார்த்தேன்
நான் எவ்வளவு தொலைவிலோ
இந்தக் கணம் அத்தனைதொலைவிலுள்ள அவற்றை
எல்லையில்லா இருளின் ஆழத்தில்
அவற்றின் கழிந்துபோன கண்சிமிட்டல்
தருணங்களைக் கண்டேன்
இந்த மூன்றாம் நாழிகையில்
என்னால் தீர்மானிக்க முடியவில்லை ;
இந்த வாழ்வை நான் முதன் முறையாகத்தான் வாழ்கின்றேனா?
அல்லது வாழ்ந்தபடியே மறந்து போய்
திருப்பித்திருப்பி நகலெடுத்துக் கொண்டிருக்கின்றேனா?
மீன் கூட தண்ணீரைப்பருகுமா?
சூரியனுக்குக் கூட சூடு உறைக்குமா?
ஒளியும் இருளைப் பார்க்குமா?
மழை கூட நனைந்து போகுமா?
கனவுகள் கூட என்னைப் போன்றே தூக்கத்தைப் பற்றி கேள்விகள் கேட்குமா?
வெகு தூரம் , வெகுவெகு தூரம் நான் வந்து விட்டேன்
நான் பார்த்தபோது நட்சத்திரங்கள் நெருக்கத்தில் இருந்தன
இன்று நாள் முழுவதும மழை பெய்து கொண்டே இருந்தது
உன் முகத்திலிருந்து எல்லா வார்த்தைகளும் வழிந்து சென்றுகொண்டே இருந்தன

தமிழ் மொழிபெயர்ப்பு : வையவன்

After Midnight

I saw the stars far off –
as far as I from them:
in this moment I saw them –
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.
And I can’t make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?
Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?
I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.

English Translation

படத்திற்கு நன்றி:

http://ellenanh.blogspot.in/2011/05/when-midnight-comes.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நடுநிசிக்குப் பின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.