கிடக்கட்டும் குப்பைகள்…

 

செண்பக ஜெகதீசன்

குறைசொல்ல ஒரு
கூட்டம் உள்ளவரை,
நிறைய வருகின்றன
நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

உறங்கவிடமாட்டார்கள்
உன்னை,
உறங்கிடவும் மாட்டார்கள்-
உன்மீது
பொறாமை கொண்டவர்கள்..

உரிய சமயமிது,
உணர்ந்துகொள்
உழைத்திடு
உயர்ந்திடு..

உதாசீனப்படுத்திடு
குறைசொல்லும் அந்தக்
குப்பைகளை…!

படத்திற்கு நன்றி

http://www.dreamstime.com/stock-photos-stock-photos-people-holding-winning-cup-image5833753
     

3 thoughts on “கிடக்கட்டும் குப்பைகள்…

 1. அன்புடைய அய்யா

  நான் எனது அலுவலகத்தில் தினமும் ஒரு ஊக்கமொழியை எழுதுவது வழக்கம். தங்களது இந்த கவிதையை அப்படியே பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டும்.

  முகில் தினகரன்.

 2. எழுத்துலகில்
  ஏறுநடை போட்டுவரும்
  என்னினிய முகில் தினகரனுக்கு
  நன்றிகள்..

  முகிலின் சாரலில் நனைய
  என் கவிதைக்கு
  முன் அனுமதியா..

  வாழ்த்துக்கள்…!
         -செண்பக ஜெகதீசன்…

 3. அன்பினிய நண்பரே செண்பக ஜெகதீசன்,
  ” பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
  போகட்டும் விட்டுவிடு
  படைத்திருப்பான் பார்த்துக் கொள்வான்
  பயணத்தைத் தொடர்ந்துவிடு ” என்னும் கவிஞர் வாலி ஜயா அவர்களின் பாடலைப் போன்று நாமெதைச் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் என்பதை அழகாய் உங்கள் கவிதையில் இனிய தமிழ் கூட்டிச் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
  அன்புடன்
  சக்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க