கவிநயா

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ

சேர்த்து வைத்த தவமனைத்தும்
சேர்ந்து உன்னைத் தந்ததுவோ
சின்னஞ்சிறு மலரே நீ ஆரிரரோ
சித்திரம் போல் கண்ணுறங்கு ஆரிரரோ

 

படத்திற்கு நன்றி:

http://www.babyphotospictures.com/cute-baby-photos.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆரிரரோ

  1. அன்பினிய கவிநயா ,
    அற்புதமான தலாட்டுக் கவிதை. தமிழ்மொழியில் தாலாட்டு ஓர் இதமான சங்கீதம் தாய்மையின் ஒஉனிதம், தாய்மையின் பரிவு, தாய்மையின் கருணை அனைத்தையும் உள்லடக்கும் ஒரு அழகிய ஆலாபனமே தாலாட்டு. அதற்கோர் உன்னத உதாரணமாக மின்னுகிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சக்தி

  2. வாசித்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, சக்தி, மற்றும் ஐரேனிபுரம் பால்ராசய்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *