விடையிலாக் காட்சி
உமாமோகன்
விடையிலாக் காட்சி
சிலநாட்களாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது
சுழித்தும் ,வளைத்தும்,
இழுத்தும்
“ஆ “எழுதும் காட்சி!
எழுதுவது நான்தானா
எனத் தெரியாவிடினும்
நான்போலவே….
எங்காவது “ஆ”கண்டுவிட்டால்,
கண்ணுக்கும் ,எழுத்துக்கும்
இடையே உலவும் புகையாக
“ஆ”உருவாகும் காட்சி,….
சிரத்தையோடும்,சிரமத்தோடும்,
உதடு மடித்தும்,
“ஆ”எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
“அ”எப்படிக் கற்றாய் ,
“இ “சிரமமில்லையா என்றெல்லாம்
கேட்டுவிடாதீர்கள்.
அது குறித்த காட்சி
ஏதுமிலாததால் ,
என்னிடம் விடையில்லை.
படத்திற்கு நன்றி :
http://blog.tsemtulku.com/tsem-tulku-rinpoche/me/we-are-our-parents.html
அன்புடையீர்
கவிதை உலகில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சாட்சி … தங்களின் இந்தக் கவிதை. கோணம் பிரமிக்க வைக்கின்றது.
வாழ்த்துக்கள்.
முகில் தினகரன்.
மிக்க நன்றி முகில் சார் தங்கள் ரசனைக்கும் பகிர்வுக்கும்