செண்பக ஜெகதீசன்…

கலங்குவதில்லை மலர்,
காய்ந்து
கீழே விழுவதற்கு..

காரணம் இதுதான்-
அதன்
கனி உதிர்க்கும்
விதை முளைத்து
மீண்டும்
மரமாகும் நம்பிக்கை…!

கலங்கி நிற்கிறாயே
மனிதா,
மரணத்தைத் தினம்
மனதில் எண்ணி…!

படத்திற்கு நன்றி:

http://www.inspirational-quotes-hq.com/Death-And-Dying.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கலங்காதே…

  1. அன்புள்ள அய்யா

    சென்ற முறை தங்கள் கவிதையை என் அலுவலக தகவல் பலகையில் எழுதிட அனுமதி கேட்டேன். நீங்களும் தந்தீர். நானும் எழுதி வைத்தேன்.
    இம்முறை உரிமையோடு நானே எடுத்துக் கொள்ளவா?
    முகில் தினகரன்.

  2. வரிகளைவிட, கருத்து அருமை.. வாழ்த்துக்கள் ஐயா.

  3. என் நன்றி
    இவர்களுக்கு-

    1.ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு-
     கருத்துமிக்க படத்துடன்
     கவிதையை வெளியிட்டமைக்கு..

    2.முகில் தினகரன் அவர்களுக்கு-
     முழு அங்கீகரம் கொடுத்து கவிதைக்கு 
     மதிப்பு வழங்கியமைக்கு..

    3.இளங்கோ அவர்களுக்கு-
     இனிய கருத்துரைக்கு..
      இவரின் கருத்துரைகள் படைப்பளியை
     இன்னும் முயன்று சிறப்புப்பெற வைக்கும்.
      இக்கவிதை 4-12-2005ல் எழுதியது,
      வரிகளை மெருகேற்றியிருக்கலாம்..
      உருவானபடியே உலவவிட்டுவிட்டேன்…!

                              நன்றியுடன்,
                       -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.