வீர மகன் சர்தார் பகத்சிங்
விசாலம்
(மார்ச் 23 – வீர மகன், தேச பக்தன், தியாகி, இளைஞன் சர்தார் பகத் சிங்கின் நினைவு நாள். அவனுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)
சட்லஜ் நதியின் கலகல ஓசை
அதன் அருகில் தூங்க உனக்கும் ஆசை
ஹூசன்வாலா சமாதிக்குள் நீ….
நிரந்தரமாக சஹீத் ஆனாய்.
சந்தூ குடும்ப ஆதவன் நீ
பகத் என்ற தேச பக்தன் நீ
சந்தன மணம் பரப்பினாய் நீ
சிம்ம கர்ஜனை எழுப்பினாய் நீ
பதிமூன்று வயதில் தொடங்க ஒரு புரட்சி
ஆனது ஆங்கிலேய ஆட்சிக்கு ஒர் மிரட்சி
சர்க்காரின் புத்தகங்ளுக்குத் தீ
அவர்களது உடைகளுக்கும் தீ
பரவியது எங்கும் சுதந்திரத் தீ
அடிக்கு அடி எங்கும் செய்தி
அஞ்சா நெஞ்சம் கொண்ட தங்கமே
வெடிகுண்டை வைத்த இளம் சிங்கமே
“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற கோஷம்
கிளம்பியது நாட்டில் ஆக்ரோஷம்
ஆங்கிலயேர் மீது கொண்டது துவேஷம்
கலைந்து போனது அவர்களது வேஷம்.
நேர்ந்தது லாலா லஜபதிராயின் கொலை
வைத்தாய் ஆங்கிலேயருக்கு உலை
சுட்டாய் அவனைத் திட்டத்துடன்
தூக்கிலும் தொங்கினாய் மகிழ்ச்சியுடன்.
உன் தேசப் பற்றை என்னவென்று சொல்ல
யாரும் நிகரில்லை உன்னை வெல்ல.
உன்னை நாங்கள் எப்படி மறப்போம்?
உன்னைப் பெற்ற வீரத் தாயை வணங்குவோம்.
=====================================
படத்திற்கு நன்றி: http://www.travelindia-guide.com