ஏழைக்கு மட்டும்..
செண்பக ஜெகதீசன்
சுதந்திர தினம்-
சிதறிடும் சிந்தனைகள்..
பாலர்க்கு-
பள்ளி விடுமுறை,
பகிர்ந்தளிக்கப்படும் இனிப்புக்கள்..
பெரியவரில் சிலர்க்கு-
பெற்றுவிட்ட சுதந்திரம்..
பலர்க்கு-
படுத்துறங்க வாய்ப்பு..
சிணுங்கும் பெண்களுக்கு-
சீரியல்கள் அவுட்..
அரசியலார்க்கு-
அடுத்தடுத்து
ஆதாய நிகழ்ச்சிகள்..
காவலர்க்கு-
கண்காணிப்பு,
வெடிகுண்டு வேட்டை..
ஏழைக்கு-
என்றும்போல
இதுவும் ஓர்
எதிர்நீச்சல் நாளே…!
படத்துக்கு நன்றி
http://makanaka.wordpress.com/tag/food/
தங்களின் கவிதை யதார்த்த உண்மையென்றால்…அதற்கு இடப்பட்டுள்ள படம் வெகு அருமை.