செண்பக ஜெகதீசன்

எலும்பில் பேதமில்லை-

எல்லோர்க்கும் ஒரே நிறம்தான்..

இரத்தத்திலும் பேதமில்லை..

எல்லோர்க்கும் துடிக்கும்

இதயத்தில்

இல்லை பேதம்..

 இதெல்லாம் சேர்ந்த

இந்த மனிதனிடம் மட்டும்

ஏன்

இத்தனை பேதம்..

இவர்கள் அடித்துக்கொள்ளவா

இத்தனை வேதம்..

இனியும் வேண்டாம் சேதம்..

இரத்தம்

இதுவரை சிந்தியது போதும்..

 மனிதா,

இனியாவது சிந்தித்தால் போதும்…!

 படத்துக்கு நன்றி

http://jeffhurtblog.com/2009/12/16/four-principles-for-planning-brain-friendly-annual-meetings/

     .   

2 thoughts on “இனியாவது…

  1. சிந்திக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

  2. முகிலின் பாராட்டுக்கு
    மனமுவந்த நன்றி…!
           -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க