செண்பக ஜெகதீசன்

வாழ்க்கைப் பயணம் தொடங்கிட

உடன்வர

உன்னை எதிர்பார்த்து நான்..

 வாழ்க்கை ஆற்றைக் கடந்திட

ஓடமாம் நம்பிக்கையுடன்

உனக்காகக் காத்திருக்கும் நான்..

 நீ வரவில்லையெனிலும் வருவாயென

நம்பிக்கைத் துடுப்புடன் நான்..

 நினைவினில் உன்னை நிறுத்தி

நிஜத்தையும் தொலைத்தவன் நான்..

 கனவினில் காணவேண்டிக் காத்திருந்து

கனவும் தூக்கமும் சேர்ந்தே

காணாமல் தொலைத்தவன் நான்..

 காண வருவாய் எனக்

காத்திருந்து

காலத்தைத் தொலைத்தவன் நான்..

 வாழ வருவாயென வழிபார்த்தே

வாழ்க்கையைத் தொலைத்தவன் நான்..

 நான்-

உயிரை உறவில் வைத்து

உன்னழகில் தொலைந்த நான்தான்..!

 

படத்துக்கு நன்றி

    http://photography.nationalgeographic.com/photography/photo-of-the-day/hidden-face/            

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நான்..நான்..

 1. அய்யா

  பிரமிக்க வைக்கின்றது இந்த வயதில் தங்களது காதல் வெளிப்பாடு. கொஞ்சம் பொறாமையும்தான்.

 2. நன்றி முகில்.
  அறுபதில் வருவதுதானே
  அனுபவக் காதல்..
  கவிதை தருவதும்
  காதல்தானே..
  அந்தக் 
  காதல் எதில் என்பதில்தானே
  இருக்குது
  கவிதையின் வெற்றி…!
         -செண்பக ஜெகதீசன்…

 3. செழியன் அய்யா
  சொன்னது சரிதான்-
  இது ஒருதலைக் காதல்தான்..
  இலக்கியத்திலும் 
  இடமுள்ளதே இதற்கு..
  இக்கவிதையில் வரும் ‘நான்’
  இருபாலார்க்கும் சொந்தமானதே..
  இவர்களில் ஒருசிலராவது
  இதயத்தை உணர்ந்து
  நான் நாமாகி இணைந்து வாழ
  நாமும் வாழ்த்துவோமே…!
                            -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *