செழியன்
அப்பா
உன்னின்
ஒரு துளியாய்  என்னை
உறைய  வைத்தாய் !
பாசம் என்னும்
உளியால்  அதை
பத்து மாதம்  செதுக்கி
உலகிற்கு  காட்டி
உனையும்  காட்டினாள்  அம்மா .
பார்த்துப்  பார்த்து  வளர்த்தாய் .
கைப் பிடித்து
கடைவீதி -கல்விக்கூடம்
என கூட்டிச்  சென்றாய் .
கண்டிப்பும் -தண்டிப்பும்
காட்டினாய் …………கசந்தாய்  அங்கு எனக்கு
 கல்லூரி வந்தேன் .
உன் உழைப்பின்  மிச்சத்தை
உன் எச்சம்
எனக்காக  செலவிட்டாய் .
இனிதாய் !அங்கு  எனக்கு
படித்து  பட்டம் பெற்றேன்
கட்டி அணைத்தாய்……
கண்ணீர்  காட்டினாய்
கண்டிப்பும் -தண்டிப்பும்
காட்டிய
உன் கண்களில்  கண்ணீரா?
ஏனப்பா .?…..
அழகான  மனைவி கேட்டேன் .
அன்பான  மனைவி  தந்தாய் .
ஆசை நிராகரிக்க பட்டு …….அங்கு  கசந்தாய்
அம்மா இறந்த போது
கதறாமல்  கண்ணீர் மட்டும்  காட்டினாய் .
கலங்காத
உன் கண்களில்  கண்ணீர் !
கலங்க  வைத்தாய்  என்னை .
ஏனப்பா?
இன்று
அன்பான  மனைவியுடன் ……
அமெரிக்காவில்  நான் .
இனிக்கிறது  என்  வாழ்வு .
துறு துறு கண்களுடன்
ஆண்  குழந்தை   ஒன்று .
அதற்கு அப்பா  நான்.
வீட்டு  சுவரில் உன் போட்டோ
அப்பா …..
உன் கண்டிப்பும் -தண்டிப்பும்
என்  ஆசை  நிராகரிப்பும்
அப்போது  கசந்தன ….கசந்தாய்  நீயும் ..
இப்போது  இனிக்கிறது .
 ஏன்? அப்பாவிற்கு
விளக்கம்  புரிகிறது ….
இனிக்கிறாய்!…….. இப்போது  நீ
இன்று …..
இன்னோர்  அப்பா .
இன்னோர் மகன் .
    

 படத்துக்கு நன்றி

http://www.resurrectisis.org/W1WebPage.htm

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அப்பா

  1. மறைந்த என் தந்தையை நினைக்க வைத்து இரண்டு சொட்டு கண்ணீரை வாங்கிக் கொண்டது உங்கள் கவிதை. நல்ல உருக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.