செண்பக ஜெகதீசன்
போடுகிற பொறுக்குத் தீனி
போதுமென்று
பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதால்
பறக்க இயலவில்லை
கோழிக்கு..
நல்ல தீனி தேடும்
நம்பிக்கை இருப்பதால்
நாரைகள் பறக்கின்றன
நாடுவிட்டு நாடு தேடி…!
நீ எப்படி
நண்பனே…!
படத்திற்கு நன்றி
http://birdingbec.blogspot.in/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
பறவைகளை வைத்து ஒரு படிப்பினை. கலக்கறீங்க சார்.
கவிதைக்குத் தந்த
கருத்துரைக்கு நன்றி
முகில் சார்…!
-செண்பக ஜெகதீசன்…