கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்!

8

 

பாகம்பிரியாள்

சில நேரங்களில், அலுத்து விட்டது என்பதற்காக,
என் முகமூடிகளை கழட்டி வைத்திருப்பேன்.
இல்லையெனில், அதீத மகிழ்ச்சியின் வெளிப்பாடாய்,
அதிக சாயத்தை என் முகமெங்கும் பூசியிருப்பேன்.  
இவையெல்லாம் உங்களுக்கு முரண்பாடாய் தோன்றும்.

வேண்டாத நினைவுகள் மக்கிப்போவதற்கு ஏதுவாய்
அவற்றை கொடிகளில் காய வைத்திருப்பேன்.
வேண்டிய உறவுகள் சொல்லாமல் விலகியதால்,  
வேதனையின் வெளிப்பாடாய் கண்ணீர் சிந்தியிருப்பேன்.
இவையெல்லாம் உங்களுக்கு வேண்டாத விஷயமாய் இருக்கும்.

ஆகவே கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்.
நான் சாவி துவாரத்தின் வழியே எட்டிப்பார்த்து விட்டு,
நீங்கள் விரும்பும் வண்ணம் வந்து நிற்பதற்கு!

 படத்திற்கு நன்றி

http://vi.sualize.us/the_cool_hunter_welcome_pop_design_art_face_picture_tRA2.html

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்!

 1. பாராட்டிய திரு. இளங்கோ அவர்களுக்கு ந்ன்றி

 2. கவிஞர் காட்டிடும்
  கவிதை முகம்
  நன்று…!
    -செண்பக ஜெகதீசன்…

 3. கவிதைக்கு முகம் தந்து, அதை பாராட்டால் அலங்கரித்த திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

 4. மிக அருமை என்று பாராட்டிய அண்ணா கண்ணன் அவர்களுக்கு
  மனமார்ந்த நன்றி.

 5. பாராட்டிய திகழ் அவர்களுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *