ஜெயஸ்ரீ ஷங்கர்

ஒரு இருமல் போதுமே
பாசக்கயிறாக அரவணைக்கும்
ஸ்டெதாஸ்கோப்..!

இதயத்தை விட்டு
இரும்புப் பெட்டியைத்
துழாவும் இயந்திரம்..!

உயிருக்குப் பின்னால்
பூஜ்யத்தைச் சேர்க்கும்
அறுவை சிகிச்சை..!

நோயாளிகள் கழிவுகள்
தாங்கும் மேடுகளாய்
வானம் பார்த்தபடி..

மருத்துவரோ பணம்
கொத்தும் பறவையாய்
வட்டமடித்தபடி..!

சின்ன இருமலுக்கு
எழுதப் படுவது மருந்தா..?
மரண சாசனமா?

பிணக் கிடங்கின் முன்பும்
போராட்டம்…மறியல்
இறப்பு..மருந்தாலா?
மருத்துவராலா?!

ஜெயஸ்ரீ ஷங்கர்

படத்துக்கு நன்றி

 http://www.dreamstime.com/stock-photo-stethoscope-medicines-to-cure-image7409520

1 thought on “உயிர்

  1. மார்ச்சுவரியிலும் மாமூல் வசூலிக்கும் மட்டரகங்களுக்கு உங்கள் கவிதை நல்ல
    சவுக்கடி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க