என்ன ஆச்சு எல்லாருக்கும் ?
மனோகரன்
என்ன ஆச்சு எல்லாருக்கும்? என் குடும்பத்தத்தான் சொல்றேன்.
என்ன ஒன்னும் புரியல்லையா? சரி விவரமாவே சொல்றேன்
என் பேரு சம்பத். வயசு 60. தொழில் ஒரு வழக்கறிஞர் கம்பனில குமாஸ்தா. இன்னும் மூன்று மாதத்தில், ஒரு இனிய மாலை நேரத்தில், மாலை போட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதுதாங்க ரிடையர்மெண்ட்.
கிட்டதட்ட இந்த 40 வருஷ உழைப்பில் மிஞ்சினது, ஒரு சுமாரான சொந்த வீடு (நல்ல ஏரியா சார்), பேங்ல கொஞ்சம் பணம். நான் வாங்கினது சம்பளம் மட்டும் தாங்க. அது தான் பேங்க்ல பணம் கொஞசமா இருக்கு. ஏதோ கடன் வாங்காம காலம் ஓடிக்கிட்டிருக்கு.
ஒரே பொண்டாட்டி. ஒரு பையன், ஒரு பொண்ணு. பையனுக்கு ஒரு சின்ன ஆபீஸ்ல சின்ன வேல. (நாம படிச்ச படிப்புக்கு இதுவே ஜாஸ்தி). பொண்ணுக்கு மாப்பிள்ள பாத்துக்கிட்டிருகோம். பையனுக்கு சொந்த பிஸ்னஸ் பண்ணனும்னு ஆசை. பொண்ணுக்கு பாரின் மாப்பிள்ளை வேணும்னு ஆசை. எல்லாருக்கும் ஆசையிருக்கு. எனக்கும் நிறைய செய்யனும்னு ஆசைதான். ஹும்.
இதுனாலயே வீட்ல சண்டதாங்க.
யாரும் என்ன பத்தி கண்டுக்கமாட்டாங்க. சில நேரம் என் மனைவிகூட.
எனக்கும் பழகிருச்சு.
ஆனா திடீர்னு இன்னைக்கு காலையில ஆச்சரியம். நார்மலா நான் எந்திரிச்சு, ஒரு 4-5 தடவ கேட்டாத்தான் காபி வரும். இன்னைக்கு பல் தேச்சுட்டு வெளியவரேன், என் பொண்ணு காபியோட நிக்கிறா ! தினம் பேப்பர் படிக்க என் கூட சண்ட போடும் பையன், என்ன பாத்த உடனே பேப்பர குடுக்கறான் !. என் மனைவி குளிக்க சுடுதண்ணி ரெடிங்கறா !.
என்ன ஆச்சு எல்லாருக்கும்!
எனக்கு ஒன்னும் புரியல. எல்லாரும் திருந்திட்டாங்களா? இருக்காதே. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு என்ன? யோசிச்சு பாக்கறேன் ஒண்ணும் புரியல. என் பையன், பொண்ணு கேட்டது எதுக்குமே நான் ஓகே சொல்லலயே. என்ன ஆயிருக்கும்.
அப்பத்தான் எனக்கு ஞாபகம் வந்திச்சு. ராத்திரி அதிசயமா எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டிருக்கும்போது, நான் ஏதோ சிந்தனையில இருந்தேன். என் மனைவி ‘ சாப்பிடும் போது என்ன யோசனன்னு ’ கேட்டதுக்கு, “நாளைக்கு உயில் எழுதணும், அது தான் யோசிக்கிறேன்” அப்படின்னேன். ஓஹோ உயிலுக்காகத்தான் இத்தன உபசரிப்பா? அடப்பாவிகளா. இருக்கட்டும்.
பாவம், இவங்களுக்கு தெரியாது. நான் உயில் எழுதப்போறேன்னு சொன்னது எனக்கில்ல, ஒரு கிளையிண்டுக்குன்னு.
நன்று. மனோகர் சார்.
திரு மனோகர் அவர்களே !நீண்ட நாட்களுக்கு பிறகு என் வணக்கம் ,உங்களிடம் இருந்து வேறு ஒரு ,அவதாரம் பார்த்தேன் ,இதுவரை தாங்கள் அரிதாரம் பூசியதைத்தான் நான் பார்த்திருக்கிறேன்,இன்று உங்கள் கதையால் என் இதயம் தொட்டீர் ,மேலும் இமயம் தொடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதுதான் இதை படித்தவர்கள் எல்லோரும் நினைக்கும் ஒன்றைத்தான் நானும் நினைத்தேன்,தயவு செய்து இதனை நம் நாட்டில் உள்ள எல்லா ,மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் ,நம் நாடு என்ன ,இந்த உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் வரவேண்டும் என்பது தான் என் ஆசை ,தயவு செய்து மேலும் ,மேலும் ,பல கதைகளை எழுத வேண்டும் ,”நமக்குள் ஒரு ரகசியம் ,இப்படி கதை எழுது என்று உங்களை தூண்டி விட்டது யார் ,அவன் விலாசம் தந்தாள் நல்லது””மச்சான் ”எதுக்குடா அந்த ஆள் விலாசம் எல்லாம் கேட்குற,,,”இந்த மாதிரி நெறைய பேர் கெலம்பிட்டாங்கடா நாட்டுல,,….அவங்கள ,…….,,,
மன்னிக்கவும் பலர் இதை கவனிக்க வேண்டும் என்பதால் தான் இப்படி சிரிப்பா இருக்கட்டும் என்று எழுதினேன் ”உண்மையில் கதை அற்புதமாக இருந்தது ,நல்ல சிரிப்பு ,அதில் ஒட்டிக்கொண்ட
கொஞ்சம் subject முடிவு நன்றாக இருந்தது ,தொடருங்கள் ,நன்று வணக்கம் *** தேவா***
ha…ha..ha…manohar sir, arumai…arumai…..idhu than ulagam…ethanai elidhaga solli vitteergal….neengal nadippu, kadhai aasiriyar enru sagala kala vallavaraaga irukkireergal….
congrats athims,aduthathu story,screenplay la erangivedavendiyathu thane.congrats ,looking forward to read more stories.but u know one thing my akka s too gud she will serve coffee before u think !!!!!!!!!!!! ok va eppadi 🙂
nice writing
ha ha ha ha!!!! Enna aachu Manoharkku???? Thirunthittaro? endru shock aagivitten!! 2 sentence paditha udane therinthuvittathu…….ithu pazhaya Manohare thaan!!! word by word ungal trade mark satire,sarcasm etc etc nirambi vazhigirathu…….. very good story.
ungalukku 60 vayasa??? sollave illa!
Manohar sir,the script and dialogues are very much Lively
அன்புள்ள மனோகர்:
உயில் மேல்தான் யாருக்கும் ஆசைவரும் உயிரைவிட, என்பதனை நகைச்சுவையோடு எழுதிவிட்டீர்கள். ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா..’ என்ற ஓளவையாரின் வெண்பா நினைவுக்கு வந்தது. Candid humour well written. Keep it up my boy!
ஸம்பத்