பழமைபேசி
 நிழல் நீண்டுவிழும் நேரம்
சென்று கொண்டிருந்தேன்
தெருமுனையிலிருக்கும்
பேருந்து நிற்குமிடம் நோக்கி
பள்ளி சென்ற மகளின் வரவுக்காய்!
முனை சென்று சேருமுன்னம்
தாயே எதிர்ப்பட்டாள்
பல கணைகளுடன்!!
நானே வந்திருப்பனே??
காய்ச்சல் நல்லாயிடுச்சா?
மத்தியானம் சாப்பிட்டீங்களா??
கொஞ்சமாவது தூங்கினீங்களா???
என் பையை நான் தூக்கிக்கமாட்டனா????
நிறைய தண்ணி குடிச்சுகுங்க!!

படத்துக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாயு”மவள்”

  1. பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது…..காலங்களும் நேரங்களும் கரைத்தாலும் கரையாதது.
    பழமை பேசி-ன் கவிதை யதார்த்தம் பேசி….இனிமை வீசி…எல்லோரையும் யோசி என யோசிக்க வைத்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.