Author Archives: நா. கணேசன்

பேச்சி

பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமன் எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான். “எங்கடா போற?” “தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!” “ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?” “ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!” ...

Read More »

மணவாளன்

என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது கூட இதுதான் முதல்முறை. யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் வாய்த்திருக்கவில்லை. நமக்கு வேண்டிய நேரத்திலெல்லாம் காலத்தை நிறுத்தி வைக்கவா முடிகிறது? மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கிறோம். மற்றதெல்லாம் விடுபட்டுப் போய்விடுகின்றன. அப்படி விடுபட்டுப் போனதில் ஒன்றுதான் இதுவும். எதுவொன்றுக்கும் ...

Read More »

அடுக்களையும் அமைதியும்

தவளைகளின் அட்டகாசத்தில் ஆர்ப்பரித்துக் கிடக்கும் குளத்திலும் அமைதி மணவாட்டி இல்லாத அடுக்களை போல!! வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் ...

Read More »

சாகும் வரை….

  பழமைபேசி   பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல் எதைக் கொண்டு வாங்குவேன் இசை? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம் எதைக் கொண்டு வாங்குவேன் அறிவு? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் எட்டுத்தொகை பத்துப்பாட்டு எதைக் கொண்டு வாங்குவேன் தமிழ்? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் திரவியம் எதைக் கொண்டு வாங்குவேன் நறுமணம்? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் என்சைக்ளோபீடியா எதைக் கொண்டு வாங்குவேன் நினைவாற்றல்? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பேரழகி எதைக் கொண்டு வாங்குவேன் பேரன்பு? பணம் ...

Read More »

நகைச்சுவைத் திருவிழா

  பழமைபேசி   நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை ...

Read More »

கொழுகொம்பு

நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன். தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் ...

Read More »

மனிதன்

வீட்டு மூலையில் நூலாம்படையொன்று ஒய்யாரமாய் ஆடியாடி பசப்பிக் கொண்டிருந்தது புகலிடம் தருகிறேன் வாருங்கள் பூச்சிகளே! அருகிற்சென்று நோக்குகையில் அது சொல்கிறது உமக்கு இங்கு இடமில்லை எம்மிலும் கொடிய களங்கிய இனத்தைச் சார்ந்தவர் நீர்!! சடுதியில் காலை விட்டெறிந்து இல்லாதொழித்துத் திரும்பும்போதுதான் வந்து அறைகிறது சொன்னது சரியோ?

Read More »

புவிக் குழந்தைகள்

குளக்கரையில் மஞ்சக்குளித்து அந்தி தொலைத்து இருள் பூசிக்கொள்ளும் குருவிகள் பூத்த புவிக் குழந்தைகள்!   Live from Halle Park Lake, Collierville, TN, U.S.A!!

Read More »

தளிர் உலகில்!

பழமைபேசி யோகா கிளாசுக்கு பாரதி நகர் போயிருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல் தாத்தாவுக்கு காப்பி போட்டுக் கொடுக்கிறாள் தாயம்மா பாட்டி! அந்த மாமாவிடம் இனிமேல் இங்கு வர வேண்டாமென்று சொல்லி அழும் சின்னமணி அக்காவுக்கு கன்னத்தில் நல்ல அறை!! சாக்கடையில் தவறி விழுந்த பிரவீணாவுக்கு கைகால் கழுவிவிட்ட பிச்சைக்காரத் தாத்தாவை பிடித்துக் கொண்டு போகிறது போலீசு! சதர்ன் மில் முரளி அண்ணனுக்கு ஷிப்ட் மாறினது தெரியாமல் மொட்டை மாடிக்குப் போகும் மெளலி மாஸ்டர் வீட்டு சந்திரகலா அக்கா! மேரி மிஸ்ஸுடைய செல்போனில் ரீடையல் போட்டுப் பார்த்ததில் ...

Read More »

ககனமார்க்கம்

பழமைபேசி நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகி விட்டால் போதும். நான் எதைச் செய்தாலும் இதைத்தான் காரணம் சொல்வார் என் மனைவி. விடிந்தால் திங்கட்கிழமை என்பதால் நீங்கள் எங்கள் மீது எரிச்சலைக் கொட்டுகிறீர்கள் என்று. உண்மையிலேயே அந்தத் திங்கட்கிழமையோடு எனக்கு எந்தத் தகராறும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் மீதும் எந்தவிதமான எரிச்சலும் எனக்கு இல்லை. ஆனால் என்ன? அந்தப் பாடாவதி ...

Read More »

முத்தம்

பழமைபேசி இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் ஒட்டு உறவு இருக்கிறதாக நினைத்துக் கொள்கிற நாட்கள், நினைக்காத நாட்கள் என அனைத்து நாட்களிலும் நடைபெறுகிற உவப்புகால பூசையிது. உடனடியாக குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது எனக்கு. சிந்தைக்கெட்டிய முதல் முத்தமாரி அதுதான். இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து மாற்றி மாற்றித் தொடர்ந்து முத்தங்கள் கொடுத்துக் கொஞ்சி நனைத்தவள் என் சின்னம்மா. அந்த நாள் தொட்டு, என்னை இடைவிடாமல் ...

Read More »

வாருங்கள் அடை தின்ன!!

பழமைபேசி சமைத்திட விரும்பி தாய்த்தமிழின் எண்ணிலடங்கா ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி இட்டரைத்தேன் மெல்லென சிந்தையம்மியில் நான்! சரியாய்த் துலங்கின சிறுகதை ஒன்றும் சொல்லடை இரண்டும்! உருசியாய் இருக்கிறதாம் எதிரில் நின்று பகர்ந்தாள் சிறுகதையைத் தின்ற என்வீட்டுக் கண்ணாட்டி! சுவையாய் இருக்கிறதாம் சொல்வது யாரெனில் அடையில் ஒன்றைத் தின்ற தமிழ்ச்சங்கத் தலைவன் செவலை மாடன்! அந்த எஞ்சிய அடையும் எப்படியிருக்கிறது சொல்லிவிடலாமே அதைத் தின்னும் நீங்கள்?!

Read More »

நிறைகுடம்

பழமைபேசி செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம். ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் ...

Read More »

பணவிடை

மிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது. மிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன? வாழ்ந்தென்ன?? தேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன்? டீ குடித்த மறுநொடியே ...

Read More »

யாவரும் கேளிர்

  சுவர்ப்பலகையில் தான் வரைந்திருந்த கோணல்மாணல் குலதேவதையை அவள் வணங்கிக் கொண்டிருக்க என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு கும்பிடுறன்ப்பா என்றதும் தூக்கிவாரிப் போட்டது நமக்கு! உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா? மறுவினவலுக்குச் சொல்கிறாள் எனக்கு சிறுசாயிடிச்சுன்னு டொனேசன்ல போட்ட பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா எனக்குத் தங்கச்சிதானேப்பா? அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா! மனம் மகிழ்ந்து நாசி திளைக்க முகமறியா அக்குழந்தைமணம் வீடெங்கும்!!

Read More »