இலக்கியம்கவிதைகள்

வாருங்கள் அடை தின்ன!!

பழமைபேசி

சமைத்திட விரும்பி
தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
இட்டரைத்தேன் மெல்லென
சிந்தையம்மியில் நான்!
சரியாய்த் துலங்கின
சிறுகதை ஒன்றும்
சொல்லடை இரண்டும்!
உருசியாய் இருக்கிறதாம்
எதிரில் நின்று பகர்ந்தாள்
சிறுகதையைத் தின்ற
என்வீட்டுக் கண்ணாட்டி!
சுவையாய் இருக்கிறதாம்
சொல்வது யாரெனில்
அடையில் ஒன்றைத் தின்ற
தமிழ்ச்சங்கத் தலைவன்
செவலை மாடன்!
அந்த எஞ்சிய அடையும்
எப்படியிருக்கிறது
சொல்லிவிடலாமே
அதைத் தின்னும் நீங்கள்?!

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  அட! அட!
  அடை! அடை!    
  பணவிடை நன்னடை! 
  இவ்வடை சொல்லடை!   
  இத்தமிழ்ச் சொல்லிடை 
  கிள்ளிட கிள்ளிட 
  ஜொள்ளிடு மென்வாய் – தமிழ்
  சொல்லிடும் உன்கை!
  அட! அட!
  அடை! அடை!   

  முகநூலில் நீங்கள் பகிர்ந்த அந்த அடை photo missing! 🙁

 2. Avatar

  அடை அடையாய் அடைத்தாலும் அழகுதமிழ் அடங்குமா
  அடைத் தேனில்  மிதந்தாலும் நம்பசியும்  அடங்குமா!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க