வீட்டு
மூலையில்
நூலாம்படையொன்று
ஒய்யாரமாய்
ஆடியாடி
பசப்பிக் கொண்டிருந்தது
புகலிடம் தருகிறேன்
வாருங்கள் பூச்சிகளே!
அருகிற்சென்று
நோக்குகையில்
அது சொல்கிறது
உமக்கு
இங்கு இடமில்லை
எம்மிலும் கொடிய
களங்கிய இனத்தைச்
சார்ந்தவர் நீர்!!
சடுதியில்
காலை விட்டெறிந்து
இல்லாதொழித்துத்
திரும்பும்போதுதான்
வந்து அறைகிறது
சொன்னது சரியோ?
முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html
உண்மை சில நேரங்களில் கசக்கும். என்ன செய்வது நூலாம் படை சொன்னது மிக்க சரி.
இனி ஒவ்வொரு முறை நூலாம்படையை நோக்குந் தோறும் நெஞ்சில் ஒரு கணம் வந்து மோதும் இந்தக் கவிதை. வரிகளிலிருந்து மீள முடியவில்லை. பகிர்விற்கு மிக்க நன்றி.