மலர்கள்!
சூரியக் கதிர்கள்
மெல்ல எட்டிப்பார்க்கும்
மென் காலைப் பொழுது
வாசல் தெளிக்கும்
வஞ்சியர் அணிந்த
வளையோசை சிரிப்பில்
மெல்லத் தலையாட்டி
வண்ணக் கதிரை
வரவேற்கும் தென்னங்கீற்றுகள்
இரம்மியமாய் இதை
ரசிக்க, ரகசியமாய்
மூச்சுக்குள் முன்னேறி
என்னை எழ வைத்தன
மலர்கள்
படத்துக்கு நன்றி
http://shoaibnzm2.blogspot.in/2012/08/flowers-beauty-desktop-wallpapers.html