நல்ல பாடங்கள்
நமக்குக் கிடைப்பது மோசமான
நேரங்களில்தான்..
அடிமேல் அடிபடும் தங்கம்தான்
ஆபரணமாகிறது
அழகாய்ப் பெண்ணுக்கு..
சிதைக்கும் சிற்றுளியால்தான்
உதிக்கிறது
உயர்ந்த சிற்பம்…!
எத்தனை அடிவாங்கினாலும்
ஏன் திருந்தவில்லை
மனிதன் மட்டும்…!
படத்துக்கு நன்றி
http://www.colourbox.com/image/a-hammer-and-a-pencil-laying-on-plywood-image-2871064


Leave a Reply