தாமரைகளே !…….தளர வேண்டாம்

செழியன்

பருவ குளத்தில்
பூத்திருக்கும்
இந்த தாமரையை ….
பார்த்து  ..பார்த்து
செல்கின்றனர் …பறிக்காமலேயே
வறுமை  சேற்றில்
அது இருக்கிறதாம் .
வரதட்சணை  பாலம்
இருந்தால்தான்
வருவார்களாம்  அதனிடம் .
தாமரைகளே ! தளரவேண்டாம் .
உம்மை பறிக்கும்
காலம் தொலைவில் இல்லை .
பறிக்காமலேயே ,,
உங்களை  பார்த்து கொண்டிருக்க
ஆண்கள்  ஒன்றும்
உங்களை  போல
பொறுமைசாலிகள் அல்ல .
 
படத்திற்கு நன்றி

http://www.naturecultures.com/0020.php

1 thought on “தாமரைகளே !…….தளர வேண்டாம்

  1. அய்யா..ஒரு உண்மையை இங்கு சொல்ல ஆசைப் படுகிறேன்.
    ஒரு ஆணின் பின்னால் ஒரு பெண் (அம்மா அல்லது அக்கா) இருந்து கொண்டு அந்த
    வரதட்சணை பாலத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறாள், என்பதுதான் யதார்த்த உண்மை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க