செழியன்

என்
புன்னகைக்காக   காதலித்தேன்
என்றாய்  முதலில் .
என்னிடத்தில் ……
பொன் நகை
இல்லை  என்றதும் ….என்னை
கை விட்டாய் .
கேட்டேன் ……..
கஷ்டம்  என்றால்
பொன் நகையை   அடகு வைக்கலாம்
புன்னகையை  வைக்கமுடியாது ….என்றாய் .
நன்றி…
உன்னை  அடையாளம்  காட்டியதற்கு .
நாளை ..
நகையும்  தீர்ந்தால்
என்னையே
அடகு  வைக்க
தயங்க  மாட்டாய்  என்பது
என்ன  நிச்சயம் .
 
படத்துக்கு நன்றி

http://www.vectorjunky.com/praying-hands—realistic…/71175583.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நன்றி

  1. பொன் வண்டுகளாய்த் திரியும் சில பெண் வண்டுகளை நாம்தான் அடையாளம் கண்டு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இது அனுபவ அறிவு அய்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *